Home  |  ஆரோக்கியம்

பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா... அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடுவது நல்லதா...

பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா... அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடுவது நல்லதா...

ஒரு பழத்தை அப்படியே சாப்பிடுவதா.. அல்லது அதனை பிழிந்து ஜூஸாக சாப்பிடுவது நல்லதா... என்பதே இன்றைய பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது.

இதில் எது சிறந்தது என்று பல ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு மோசமானதாக அமையும் என்று பிரிட்டனின் கிளாஸ்கோவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பழச்சாற்றில் அதிக சர்க்கரை இருப்பதால், மேசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கிளாஸ்கொவ் பல்கலைக்கழக இரத்த குழாய் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசியரியர் நவீத் சாத்தார், மருத்துவர் ஜாசன் கில் ஆகியோர் லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியல் இதழில் இந்த புதிய ஆய்வுப் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளனர்.

பழச்சாறுகளிலுள்ள ஊட்டசத்து்ககளை தெளிவாக அச்சிட்டு புட்டிகளின் மேல் ஒட்டுவதோடு, ஒரு நாளைக்கு 150 மில்லிக்கு அதிகமாக பழச்சாறு குடிப்பதை தவிர்க்க மக்களை அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பழச்சாறு உடலுககு மிகவும் நல்லது என்று எண்ணி பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறு குடிப்பது மிக மேசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.


பழச்சாறு அதிக செறிவுடைய ஆற்றலையும், சர்க்கரையையும் உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக கூறினால், 250 மில்லி ஆப்பிள் பழச்சாற்றில் நூற்றி பத்து கிலோ கலோரிகளும், 26 கிராம் சர்க்கரையையும் உள்ளன.  எனவே, அதிக சர்க்கரை அளவு நீரிழிவு நோய்க்கு வழிகோலும்.

ஒரு குவளை பழச்சாறு, ஒரு பழத்துண்டைவிட அதிக சர்க்கரையை கொண்டுள்ளது. பழத்தை நேரிடையாக உண்னும்போது கிடைக்கக்கூடிய நார்சத்து அதனை பழச்சாறாக குடிக்கும்போது கிடைப்பதில்லை. பழச்சாறுகளில் விட்மின்களும், தாதுப் பொருட்களும் உள்ளன.

ஆனால், பிற இனிப்பான சாறுகளில் சர்க்கரையை தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. இதனை உறுதிச் செய்ய புதிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பொருட்கள் அதிகமாக இருந்த பிறகும், அரை லிட்டர் திராட்சை பழச்சாறை மூன்று மாதங்கள் நாள்தோறும் அருந்தி வந்தவர்களிடம் இன்சுலின் தடுப்பு மற்றும் இடை தசை அதிகரிப்பு காணப்பட்டதை புதிதாக நடத்திய ஆய்வில் அறியவந்துள்ளனர்.

பழச்சாறு போடும்போது பழத்திலுள்ள சர்க்கரையை தவிர, சுவையாக இருக்க நாம் சேர்க்கின்ற சர்க்கரையும் சேர்ந்து மிகவும் அதிகமாகி விடுகிறது. அதிக சர்க்கரை அளவு உடல்நலத்தில் சிக்கல்களையே ஏற்படுத்தும்.

சிறிய குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்க பழகிவிட்டால், பிறகு பழங்களை கடித்து சாப்பிட அவர்கள் விரும்புவதில்லை.  எனவே, பல் முளைத்தவுடன், குழந்தைகளுக்கு பழங்களை சிறிதாக அரிந்து கடித்து உண்ண வைப்பதே மிகவும் நல்லது.

பழங்களை சாறாக பிழியாமல் அப்படியே கடித்து உண்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

  06 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!