Home  |  திரை உலகம்

ஜில்லா - ஒரு சிறப்பு முன்னோட்டம் !!

திருப்பாச்சி படத்திற்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸும், விஜய்யும் இணைந்துள்ள படம் இது.

 

விஜய்யின் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம் ஜில்லா. தமிழ் நாட்டில் 250 திரையரங்குகளிலும், கேரளாவில் 300 திரையரங்குகளிலும் ரிலீஸ்!! 

 

கேரளாவில் ஜில்லவை மோகல் லாலே ரிலீஸ் செய்கிறார்.

 

உலகம் முழுவதும் 2000 தியேட்டர்களில் ரிலீசாகிறது. சேனல் ரைட்ஸ் மட்டும் 18 கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள்.

 

வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இதில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருக்கிறது.

 

விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடியிருக்கிறார்கள்.

 

ஜில்லாவில் மோகன்லால் விஜய்க்கு அப்பாவாக வருகிறார். 

 

ஜில்லாவில் விஜய் பெயர் சக்தி.

 

மோகன்லால் வெள்ளை வேட்டை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார். விஜய் மார்டன் உடைகளில் வந்து அசத்துவாராம் 

 

அரசியல் வசனங்கள், சர்ச்சைக்குரிய வசனங்கள் இருக்காது. ஆனால் டைமிங் டயலாக்குகள் உண்டு.

 

ஜில்லாவில் மொத்தம் ஆறு பாடல்கள், அதில் ஒன்று மோகன் லால்,விஜய்யின் ஓப்பனிங் சாங். ஒன்று திருவிழா சாங். ஒன்று குத்துசாங். குத்துசாங்கில் விஜய்யுடன் ஹாலிவுட் நடிகை செக்ரலட் வில்சன் ஆடியிருக்கிறார். ஒரு டூயட் பாடல் ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதியில் இதுவரை யாரும் படமே எடுத்திராத லொக்கேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.

 

படத்தில் காமெடிக்கு, பரோட்டா சூரி இருந்தாலும், விஜய்யின் மேனரிசங்கள் அசத்தலாக இருக்குமாம். இது போதாதென்று தெலுங்கு காமெடி நடிகர் பிரேமானந்தமும் இருக்கிறாராம்.

 

கதையில் அதிரடி திருப்பமாக நாயகி காஜல் அகர்வால் இருப்பாராம். 

 

காஜல் அகர்வாலும், காமெடி நடிகர் சூரியும் போலீசாக வருகிறார்கள்.

 

விஜய், இதில் சில கெட்டப்கள் போடுகிறார். அதில் ஒரு கெட்டப் முஸ்லிம் இளைஞன்.

 

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் விமான நிலையம் அருகிலும், சென்னை பின்னி மில்லிலும் படமாக்கப்பட்டுள்ளது.  

 

ஊருக்கு நல்லது செய்ற பெரிய மனுஷன் மோகன்லால். அவருக்கு எதிரிகள் நிறைய. அவருக்கு வரும் ஆபத்துகளை அவருக்கே தெரியாமல் விஜய் முறியடிப்பதுதான் கதை. ஒரு காரியத்தை மோகன்லால் திட்டமிடும்போதே விஜய் முடித்துவிட்டு வந்து நிப்பாராம். இதுதான் கதை பற்றி இப்போதைக்கு கசிந்திருக்கும் தகவல். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்