Home  |  திரை உலகம்

ஜிகர்தண்டா ( Jigarthanda )

ஜிகர்தண்டா ( Jigarthanda  )

Movie Name: Jigarthanda ஜிகர்தண்டா
Hero: SIDDHARTH
Heroine: LAKSHMI MENON
Year: 2014
Movie Director: KARTHIK SUBBURAJ
Movie Producer: FIVE STAR FILMS
Music By: Santhosh Narayanan

ஊரே நடுங்கும் அதிபயங்கர ரவுடிக்கு நடிப்புக் கலை மீது திடீர் ஆசை வருவதால் விளையும் ரகளைதான் ‘ஜிகர்தண்டா’.கார்த்திக்குக்கு (சித்தார்த்) சினிமா இயக்குநராக வேண்டும் என்பது கனவு. ரத்தம் தெறிக்கும் க்ரைம்கதையை எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் உள்ள அதிபயங்கர ரவுடியான ‘அசால்ட்’ சேதுவின் (பாபி சின்ஹா) வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமென்று நினைக்கிறான். அவன் வாழ்க்கையை ஆழமாகவும் விவரமாகவும் தெரிந்துகொண்டு படமாக்க விரும்புகிறார். மதுரையில் தன் நண்பன் ஊரணியின் (கருணாகரன்) உதவியுடன் வேலையைத் தொடங்குகிறார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும் நேரத்தில் சேதுவிடம் மாட்டிக்கொள்கிறான் கார்த்திக்.

படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளைஞனின் கதையாகத் தொடங்கி, படமாக எடுக்கப்படும் ரவுடியின் கதையாக விரிந்து, படம் எடுக்கப்பட்ட கதையே முக்கியக் கதையாக மாறுவதுதான் திரைக்கதையின் ஆச்சரியம். முக்கிய பாத்திரம் என்ற ஒன்று இல்லாமல் நிகழ்வுகளை வைத்தே கதையை நகர்த்திக்கொண்டு போன அணுகுமுறையின் மூலம் வித்தியாசப்படுகிறார் கார்த்திக் சுப்பராஜ். எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் கலவை செய்யப்படுகின்றன. ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.

சில காட்சிகளை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். உதாரணம் கழிப்பறையில் நடக்கும் கொலை. சின்னப் பாத்திரங்கள்கூட மனதில் ஒட்டிக்கொள்கின்றன. பெட்டிக்கடை தாத்தா, நாயகனின் அம்மா, கொல்லப்பட்டவனின் மனைவி, குழந்தை... இவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர், கதாநாயகியையும் அவளுடைய காதலையும் இவ்வளவு மேலோட்டமாகவா? புடவை திருடும் கதாநாயகி தமிழுக்குப் புதுசு. லட்சுமி மேனனுக்குப் படத்தில் வேலையே இல்லை.

பாபி சின்ஹாவின் அபார நடிப்புக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். அலட்டிக்கொள்ளாத ரவுடி, பின்னாளில் உருமாறும் விதத்தைக் கச்சிதமாகவும் நுட்பமாகவும் சித்தரித்திருக்கிறார். கொடுத்த வேலையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சித்தார்த். நடிப்பு வாத்தியாராக வரும் சோமசுந்தரத்தின் நடிப்புக்கும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும் அரங்கில் ஆரவாரம். நண்பனாக வரும் கருணாகரன், சேதுவின் கையாளாக வரும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்துக்கு மதிப்பைக் கூட்டுகிறார்கள். குற்றப் பின்னணியும் நகைச்சுவையும் கலந்த திரைக்கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்