Home  |  திரை உலகம்

ஜீவா - திரை விமர்சனம் !!

இயக்கம் : சுசீந்திரன்


நடிப்பு : விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, சூரி, லக்ஷ்மன், சார்லி.


இசை : டி.இமான் 


சிறுவயதில் இருந்தே ஜீவாவுக்கு(விஷ்ணு) கிரிக்கெட்டின் மீது அலாதி பிரியம். 


சின்ன வயதிலேயே தாயை இழந்த ஜீவா, தந்தை இருந்த போதிலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சார்லி வீட்டில் வளர்ந்து வருகிறார். 


நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஜீவாவுக்கு பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. 


பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஜீவாவோ, கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு படிப்பில் ஜீரோ ஆகிறார். இதனால், ஜீவாவின் அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். 


இந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் நாயகி ஜெனி (ஸ்ரீதிவ்யா) ஜீவாவை காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஜீவாவும், ஜெனியை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்கள். 


ஜெனியை பிரிந்த சோகத்தில் குடி பழக்கத்திற்கு அடிமையாகிறார் ஜீவா. ஜீவாவை, குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க அவனுக்கு பிடித்த கிரிக்கெட் கிளப்பில் சென்று சேர்த்துவிடுகிறார் அவனது அப்பா.


அங்கு ரஞ்சித் (லஷ்மண்), டேவிட் (சூரி) இருவரும் இவருக்கு நண்பர்களாகிறார்கள். கஷ்டப்பட்டு திறமையை வெளிப்படுத்தும் ரஞ்சித்தும், ஜீவாவும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அரசியலால் இவர்களது திறமை முடக்கப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். 


ரஞ்சித்தின் சாவினால் பாதிக்கப்படும் ஜீவா, பிறகு ஜெனியை தேடி கண்டுபிடித்து, இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்துகொடுப்பதாக ஜீவாவிடம் கூறுகிறார். 


இறுதியில், ஜீவா காதலுக்காக, கிரிக்கெட்டை தியாகம் செய்தாரா, இல்லை கிரிக்கெட்டில் சாதித்து, காதலிலும் சாதித்தாரா என்பதே ஜீவா படத்தின் மீதி கதை...  


கதைக்கு தேவையான கிரிக்கெட் வீரர் கதாபத்திரத்தை, தன் இயல்பான நடிப்பின் மூலம் நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் விஷ்ணு... 


ஜெனியாக வருகிறார் ஸ்ரீ திவ்யா. குறும்புத்தனமான பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். பொறுப்புகளை உணர்ந்த கல்லூரி மாணவியாகவும் அற்புதமாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.


ரஞ்சித் கதாபாத்திரத்தில் வரும் லஷ்மணுக்கு அழகான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார் லஷ்மண்.  


சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 


ஜீவாவின் பக்கத்தி வீட்டுக்காரனாக வரும் சார்லிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை திறம்பட நடித்து கைதட்டல் வாங்குகிறார். 


விளையாட்டிலும் அரசியல் எப்படி விளையாடுகிறது என்பதை கதைக்களமாக எடுத்துக் கொண்டு, சிறப்பான படத்தை கொடுத்த இயக்குனர் சுசீந்திரனை பாராட்டலாம்.  


டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை.. 


மொத்தத்தில் "ஜீவா" வித்தியாசமான ஒரு கிரிக்கெட் கதை..... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்