|
||||
ஜெ., உடல் மாறுச்சு.! முகம் கருப்பேறிச்சு..! எங்கக்கிட்ட போட்டோ வீடியோ இருக்கு..! திண்டுக்கல் சீனிவாசன் |
||||
![]() |
||||
![]() தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது ஏன் படம் எடுக்கவில்லை. ஏன் வீடியோ எடுக்கவில்லை என்று பலர் கேள்விகள் எழுப்பிவந்தனா். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. அப்போது அங்கு மருத்துவமனை தரப்பில் வீடியோ எடுக்கவில்லை. போட்டோ எடுக்கவில்லை. ஜெயலலிதா எடுக்கவேண்டாம் என்று கூறினார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்லில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சரும் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவா் கூறியதாவது: நானே 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் சேவ் செய்யாமல், முடிவளா்ந்து, முடிக்கு மை அடிக்காமல் இருந்தால் யாருப்பா இங்க சீனினு மக்கள் கேட்பாங்க? மருத்துவமனையில் ஜெயலலிதா உடல் மாறுச்சு. ஊசி, மருந்தால் முகங்கள் கருப்பேறிச்சு. அவங்க இயற்கையிலேயே அழகுதான். ஆனா, அவங்க உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில, பெட்லேயே படுத்திருக்கும் போது, எப்படியெல்லாம் முகங்கள் இருக்கும்ங்கிறது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். அப்பவும் கூட போட்டோ எடுத்துப்போடலாம்னு அப்போலா ஆஸ்பத்திரி சேர்மன் மற்றும் எங்களைப் போன்றவர்கள் எல்லாம், ‘‘ அம்மா, நீங்க நலமா இருக்கீங்கங்கிறதை போட்டோ எடுத்து பேப்பர்ல போடலாமா?”னு கேட்டோம். அதுக்கு அவங்க, ‘‘ சீனிவாசன், நீங்கள்லாம் இதுக்கு முன்னாடி என்னை எப்படி பார்த்திருக்கீங்க. இப்ப நான் இருக்கற நிலை என்னா? நான் உடல்நிலை தேறி, குளிச்சி முழுகி, நல்லா டிரஸ் பண்ணிகிட்டு, நானே வந்து வெளிய நிண்ணு எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்வேன். அதுவரைக்கும் பொறுமையாக இருங்க. பெண்கள், அம்மா இப்படி ஆகிட்டாங்களேனு நினைப்பாங்க. அதுனால உடல்தேறி வரட்டும் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் புகைப்படம் எடுக்காதீங்க‘‘னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு சிகிச்சை செய்யும்போது போட்டோ, வீடியோ எல்லாம் எடுத்து வைச்சிருக்கு. ரொம்ப தேவைப்பட்டா அதைப் போட்டு காட்டுவாங்க. இவ்வாறு அவர் பேசினார். முதல் முறையாக ஜெயலலிதா குறித்து புகைப்படம், வீடியோ இருப்பது அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. அது தேவைப்படும்போது வெளியில் காட்டப்படும் என்றும் அவரால் கூறப்பட்டது. இது அதிமுகவினரிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவை அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதா போட்டோ எடுக்க வேண்டாம் என்று கூறியதால் எடுக்கவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு அப்போலோவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
||||
Minister speaking the truth about jayalaitha dead | ||||
![]() |
||||
25 Feb 2017 | ||||
User Comments | ||
|
Post your comments |