Home  |  திரை உலகம்

ஜன்னல் ஓரம் ( Jannal Oram )

ஜன்னல் ஓரம் ( Jannal Oram )

Movie Name: Jannal Oram ஜன்னல் ஓரம்
Hero: VIMAL
Heroine: POORNA
Year: 2013
Movie Director: KARU PAZHANIAPPAN
Movie Producer: Hemanth Movies
Music By: VIDYASAGAR

ஒரு மலைக் கிராமத்து மக்களின் பாசத்தை பெற்றிருக்கும் அரசுப் பேருந்து பழநி டு பண்ணைக்காடு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன், நடத்துநர் விமல். ஊரின் மரியாதைக்குரிய பிரமுகர் ராஜேஷின் மகனை, விமல் ஒரு விபத்தில் கொன்றுவிட்டதாகக் ஓட்டுநர், நடத்துநர் மீது 'கொலையாளி’ முத்திரை விழுகிறது, குற்றம்சாட்டப்பட்டு சிறை செல்கிறார். அந்த மர்மத்தின் முடிச்சை ஓட்டுநர்-நடத்துநர் கூட்டணி எப்படி அவிழ்க்கிறது என்பதே மீதிக் கதை.மலையாளத்தில் ஹிட்டான 'ஆர்டினரி’ படத்தை அப்படியே தந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். அப்படியே ரீமேக்காமல், தமிழ்நாட்டு வகையில் ஜாலியாகப் படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.

'ரேடியேட்டர் சூடா இருக்கு. தண்ணி ஊத்திட்டு வந்துறேன்’ என்று சலம்பும் பார்த்திபன், முதல்முறை நடத்துநர் விமல், 'எனக்காக ஆபீஸர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க’ என்று உதார்விடும் மனீஷா, காலையில் பட்டை பூசும், மாலையில் 'பட்டை’ போடும் கிருஷ்ணமூர்த்தி, 'எனக்கு வேலை செஞ்சா வியர்க்கிற வியாதி’ என்று திரியும் சிங்கம்புலி, முரட்டு முன்கோபி விதார்த், காதல் வழியக் காத்திருக்கும் பூர்ணா, 'அடக்க அமைதி’ ரமணா, 'டூல்ஸ் கிட்’ சந்தானபாரதி என பல குணாதிசயங்களுடன் வரும் கதாபாத்திரங்களே படத்தின் பலம்.

பெண்களைப் பார்த்தால் அப்படி, தங்கையைப் பற்றி நினைத்தால் உருகி இருக்கிறார் பார்த்திபன். , 'டிக்கெட்... டிக்கெட்’ என்று ரிகர்சல் பார்த்துச் சிரிக்கவைக்கும் விமல், கொலையாளி முத்திரைக்கான பரிதவிப்பின்போது பரிதாபம்.ஆனால், என்னதான் கிராமமாகவே இருந்தாலும், அந்த நாலைந்து கேரக்டர்கள் மட்டுமே உலாத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்களா., அதை கொஞ்சம் பார்த்திருக்கலாம்.அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலையும் மலை சார்ந்த பசுமையும் மனதில் ஒட்டிக்கொள்கிறது. காமெடி ,சஸ்பென்ஸ் ,த்ரில்லர் என்ற முயற்சியில், இந்த 'ஜன்னல் ஓரப்’ பயணம்.....கொஞ்சம் விபரீதமானதுதான்.



  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை