Home  |  திரை உலகம்

கோச்சடையான் சிறப்பு காட்சியை பார்க்க போகிறார் டைட்டானிக், அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் !!

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கோச்சடையன் படத்தின் சிறப்பு காட்சியை டைட்டானிக், அவதார் போன்ற உலக மெகா ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பார்க்கவிருக்கிறார். இந்த சிறப்பு தகவலை படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


ஹாலிவுட் திரையுலகை பொறுத்தவரை புதுமையான விஷயங்களை வைத்து படம் எடுப்பதில் ஜேம்ஸ் கேமரூன் முடிசூட மன்னராக திகழ்ந்து வருகிறார். எல்லோரும் லைவ் ஆக்ஷன் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, இவர்தான் அவதாரில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் எனும் உத்தியைப் பயன்படுத்தி வேற்றுக் கிரகவாசிகளை உருவாக்கி 3 டியில் காட்டி நமையெல்லாம் அசர வைத்தார். 

தற்போது அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் படத்தை ரஜினியை வைத்து எடுத்திருக்கிறார் அவரது இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். 


கோச்சடையான் படத்தின் இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த வேலைகள் முடிந்ததும், மார்ச் 20-ம் தேதி தணிக்கை குழுவுக்கு அனுப்பப்படுகிறது. இதற்கிடையில் இந்தப் படத்தை ஜேம்ஸ் கேமரூனுக்கு போட்டுக் காட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சவுந்தர்யா. இது ஏதோ விளம்பரத்துக்காக அவர் அறிவித்ததல்ல. நிஜமாகவே இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். 


அவதார், டின்டின் போன்ற படங்களை சுமார் 1500 கோடி செலவில் ஹாலிவுட்டில் உருவாக்கினார்கள். ஆனால் சவுந்தர்யாவோ ரூ 125 கோடியில் கோச்சடையானை உருவாக்கியுள்ளார். பத்தில் ஒரு பங்கு கூட பட்ஜெட் இல்லை. ஆனால் சர்வதேச தரத்தில் கோச்சடையான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைக் கேள்விப்பட்ட ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தை அவருக்கு திரையிட்டுக் காட்டுவேன் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்