Home  |  அறுசுவை

ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!

ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!

ஜிலேபி பிரியர்கள் ஏராளம் ஆனால் வீட்டில் செய்ய தெரியாதவர்களுக்கு இதோ இதப்படிங்க - ஜிலேபி செய்ய கத்துக்குங்க .


அவசியமான பொருட்கள் - 

உளுத்தம் பருப்பு - கால் கிலோ
பச்சரிசி - ஒரு மேசைக்கரண்டி

 

சர்க்கரை - 400 கிராம்
பசு நெய் - அரை கிலோ

 


உளுத்தம் பருப்பு கால் கிலோ மற்றும் ஒரு மேசைக்கரண்டி பச்சரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

 

சர்க்கரை 400 கிராம் எடுத்து அகன்ற பாத்திரத்திலிட்டு கால் லிட்டர் தண்ணீர் விட்டு வாணலியில் பாகு காய்ச்ச வேண்டும்.

 

பிறகு கலவை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும் சிறிது கேசரி பவுடர் போட்டு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் சிறிது தணல் போட்டு அதில் வைக்கவும்.

 

வாணலியை அடுப்பில் வைத்து கால் கிலோ நெய் அல்லது எண்ணெய் விட்டுக் நன்கு காயவிடவும். கனமான கைக்குட்டை போன்ற துணியால் சுண்டுவிரல் நுழையக் கூடிய அளவு ஒரு சின்ன ஓட்டைப் போட்டு அதில் ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைத்து கைமுறுக்கு பிழிவது போன்று எண்ணெயில் மூன்ற அல்லது நான்கு சுற்றுகள் வட்டமாகப் ஒரே இடத்தில ஜிலேபி போல பிழிந்து கொள்ளவும்.

 

ஜிலேபி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பாகில் போட்டுக் சிறிது ஊற விடவும். இதேபோன்று எல்லா மாவையும் ஜிலேபிளாகப் பிழிந்து பாகில் போட்டு ஊறியதும் எடுத்து வைக்கவும்.

ஜிலேபி ரெடி சந்தோசமா சாப்பிடுங்க .

Jalebi method for making
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!