Home  |  ஆரோக்கியம்

பலாப்பழம் - சூடு தணிக்கும் !!

பலாப்பழம் - சூடு தணிக்கும் !!

பலாபழம் ஒரு சிறந்த பழம் அக்காலத்திலேயே முக்கனிகளில் இரண்டாம் கனியாக இருந்ததாம்.
தமிழில் பலாவிற்கு ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் என வேறு பெயர்களும் உள்ளன.

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது

பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும்.


பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.


வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.

 

பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.


நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு


குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.


வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.


தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.


பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.

 

  08 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!