Home  |  திரை உலகம்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - திரை விமர்சனம் !!!

நடிகர்கள் : விஜய் சேதுபதி

 

நடிகைகள் : நந்திதா, சுவாதி

 

இயக்கம் : கோகுல்

 

இசை : சித்தார்த்

 

ஒளிபதிவு : மகேஷ் முத்துசாமி

 

விஜய் சேதுபதி - நந்திதா காதல், அஸ்வின் - சுவாதி காதல், துப்பறிதல் போன்ற மூன்று கதை களங்களையும் ஒன்றாக சேர்த்து காமெடி கலந்து கொடுத்திருக்கும் படம் தான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

 

ஹவுசிங் போர்டில் குடியிருக்கும் சுமார் மூஞ்சி குமாராக வரும் விஜய் சேதுபதிக்கு எதிர் வீட்டு குமுதாவாக வரும் நந்திதா மீது ஒரு தலைக்காதல். இதனால் ஏற்படும் எதிர்ப்புகளும், பிரச்சனைகளும் ஒருபுறம். வங்கியில் மார்க்கெட்டிங் வேலை செய்யும் அஸ்வினும், சுவாதியும் காதலிக்கிறார்கள். அஸ்வின், மார்க்கெட்டிங் வேலையில் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சனையின் காரணமாக, குடித்து விட்டு வண்டியை ஒட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், பிறகு அந்த பெண்மணியை மருத்துவ மனையில் சேர்க்கிறார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அவசரமாக ரத்தம் தேவைபடுகிறது. அதற்காக விஜய் சேதுபதியை டாஸ்மாக்கிற்கு தேடி வருகிறார்கள் அஸ்வினும் அவரது நண்பர்களும். 

 

அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய்சேதுபதி செல்போனை திருடி தப்பித்து விடுகின்றனர், உயிருக்கு போராடும் பெண்மணிக்கு விஜய்சேதுபதியின் அரிய வகை ரத்தம் தேவை. கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவன்.

 

இவை எல்லாம் சரியாகி விஜய்சேதுபதியின் ரத்தம் பெண்மணிக்கு கிடைத்ததா, அஸ்வினின் காதல் என்னவானது, கொலையாளிகள் சிக்கினரா, செல்போன் விஜய்சேதுபதிக்கு திரும்ப கிடைத்ததா, விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவர் தப்பித்தாரா போன்ற கேள்விகளுக்கு பதிலை "குடி குடியை கெடுக்கும்" என்ற கருத்தை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

 

படத்தில் விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகளால், ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால், திரையரங்கம் முழுவதும் அதிர்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மருத்துவமனையில் சேதுபதி அடுக்கும் லூட்டி இருக்கிறதே.....சான்சே இல்ல....

 

படம் எப்படியிருந்தாலும் விஜய்சேதுபதிக்கு இந்த படம் மற்றுமொரு மயில்களாக இருக்கும். நந்திதா மீது ஒரு தலை காதல் கொண்டு அவரை டார்ச்சர் செய்யும் போதும், பசுபதியிடம் தன் காதலை மொக்கை இங்கிலீஷூடன் விவரிக்கும் போதும், க்ளைமாக்ஸில் காதலியை இம்ப்ரெஸ் செய்ய ரத்தம் கொடுக்க செல்லும் போதும் அசத்தோ அசத்து என்று அசத்தியிருக்கிறார்.

 

படித்த இளைஞராக வரும் அஸ்வின் காதலியிடமும் உயரதிகாரியிடமும் சூழ்நிலைக்கேற்ப பொய் சொல்லி சமாளிக்கும் போக்கில் இன்றைய நடுத்தர வர்க்க இளைஞர்களை கண்முன் நிறுத்துகிறார். அதிலும் வங்கி மேனேஜர் போன் பண்ணும்போது ஒரே அறைக்குள் இருந்து கொண்டு அஸ்வின் நண்பர்கள் போன் பேசும் காட்சி இருக்கிறதே...செம காமெடி ....

 

நந்திதா விஜய்சேதுபதியை காதலிக்காமல் திட்டிக் கொண்டே இருப்பதும்... கடைசி நேர இக்கட்டிற்காக விஜய்சேதுபதியிடம் நெருங்கி வந்து ரத்தம் கொடுக்க வைப்பதும், கடைசியில் காதலுக்கு முந்தைய நிலையை அடையும் போதும் நன்றாக இருக்கிறது.

 

சென்னையில் வாழும் டிபிக்கல் பெண் கதாபாத்திரம் ஸ்வாதிக்கு. ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிக்கும் போதும், காதலன் பொய் சொல்வதை கண்டுபிடித்து அவன் எங்கு இருப்பான் என யூகித்து அங்கு சென்று பிடிக்கும் போதும் பிரச்சனைகளில் அவனை விட்டு விலகிச் செல்லாமலும் சிறப்பாக செய்துள்ளார்

 

அண்ணாச்சியாக பசுபதி, சூரி, எம் எஸ் பாஸ்கர் என வருகிற கதாபாத்திரங்கள் எல்லாமே காமெடியில் ரகளை செய்திருக்கிறார்கள்.

 

சித்தார்த் இசையில் ஒரு பாடல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பின்னணி இசை பரவாயில்லை. 

 

மொத்தத்தில் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" - காதல், காமெடி, புலனாய்வு......

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்