Home  |  திரை உலகம்

இசைஞானிக்கு - பாராட்டு விழா !!

இசைஞானிக்கு - பாராட்டு விழா !!

இசை ஞானி இளையராஜா 1001 படங்களுக்கு இசையமைத்திருப்பதை கொண்டாடும் வகையில் மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த நமது தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டு இருக்கிறது.

 

இயக்குநர் பாலா இயக்கி வரும் 'தாரை தப்பட்டை' படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். அவரது இசையில் உருவாகி வரும் 1000-வது படம் என்ற பெயரை 'தாரை தப்பட்டை' பெற்றிருக்கிறது.

 

தனுஷ் நடித்த ஷமிதாப் படம் இளையராஜா இசையில் உருவான 1001வது படமாகும்.

மும்பையில் ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் மும்பையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல், அமிதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு பிரம்மாண்டமான வகையில் பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் இது குறித்து விவாதித்து இருக்கிறார்கள்.

 

இளையராஜா தனது பாடல்களின் அத்தனை ராயல்டி பொறுப்பையும் தயாரிப்பாளர் சங்கத்திடம் கொடுத்திருக்கிறார். அதன்படி, இளையராஜா பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி நேரடியாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும்.

 


அதில் 40% தொகையை அப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கிவிட்டு, மீதமுள்ள தொகையை இளையராஜாவிடம் தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கும்.

 

அதுமட்டுமன்றி இளையராஜா 1001 படங்களுக்கு இசையமைத்ததை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

 


அனைத்து திரையுலகினரும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்." என்று தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.

இசைஞானி உலக ஞானி !!!

  12 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்