Home  |  திரை உலகம்

இரும்பு குதிரை ( Irumbu Kuthirai )

இரும்பு குதிரை ( Irumbu Kuthirai )

Movie Name: Irumbu Kuthirai இரும்பு குதிரை
Hero: ADHARVAA
Heroine: Priya Anand
Year: 2014
Movie Director: Yuvaraj Bose
Movie Producer: AGS FILM ENTERTAINMENT
Music By: G.V.PRAKASH KUMAR


பிரித்வி (அதர்வா) பைக் ரேஸர். ஆனால் பைக் விபத்தில் அப்பாவை இழந்த பிறகு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான். பைக் ரேஸையே விட்டுவிட்டு ‘ஸ்லோ’ பீட்சா டெலிவரி செய்பவனாக மாறிவிடுகிறான். அப்பாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மகனை மீட்பதற்கு பிரித்வியின் அம்மா (தேவதர்ஷினி) முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் பேருந்தில் சந்திக்கும் சம்யுக்தாவைப் (ப்ரியா ஆனந்த்) பார்த்தவுடனே காதலிக்க ஆரம்பிக்கிறான் பிரித்வி. காதலியின் வற்புறுத்தல் காரணமாக ‘டுகாட்டி’ பைக் வாங்கும் பிரித்வி, வில்லன் ஜானி டிரை நுயனை எதிர்கொள்ள வேண்டிவருகிறது.

ஜானி யிடம் மாட்டிக்கொள்ளும் சம்யுக்தாவை பைக் என்னும் இரும்புக் குதிரையை வைத்து எப்படி பிரித்வி காப்பாற்றுகிறான் என்பதுதான் படம்.பைக் ரேஸைப் பின்னணியாகக் கொண்ட காதல் கதை எப்படிப் பயணிக்க வேண்டுமோ அப்படி ‘இரும்பு குதிரை’ பயணிக்கவேயில்லை. படத்தில் கடைசி பதினைந்து நிமிடம் மட்டுமே ’பைக்’ வருகிறது. அந்தக் காட்சிகள் நன்கு படமாக் கப்பட்டிருந்தாலும் அது பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றவைக்கவில்லை. காரணம், வசனம், ஜி.வி. பிரகாஷின் இசை, தாமரையின் பாடல்கள் என எதுவுமே மனதில் நிற்கவில்லை. திரைக்கதைக்குத் தொடர்பே இல்லாமல் வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. படத்தின் முதல் பாதியில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இரண்டாம் பாதியில், படத்தின் திருப்புமுனையான ப்ளாஷ்பேக்கை இரண்டு கதாபாத்திரங்கள் வாய்ஸ் ஓவரில் அலட்சிய மாக முடித்துவிடுகிறார்கள். நடிப்பைப் பொறுத்தவரை படத்தில் தேவதர்ஷினி, ஜெகன், ஜானி மட்டுமே நடித்திருக்கிறார்கள்.

படத்தில் அதர்வா, பிரியா ஆனந்தைத் தீவிரமாகக் காதலிக்கிறார் என்ற விஷயத்தை வசனத்தால் மட்டுமே பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறார். அதுவும் மனதில் ஒட்டவில்லை. பிரியா ஆனந்த் படத்தில் வசனம் மட்டும் பேசுகிறார், லட்சுமியைத் திரையில் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. அதர்வாவிற்கு பால்ய தோழியாகக் காட்டுவதற்கு வேறுயாருமே இயக்குநருக்கு கிடைக்கவில்லையா என்று எண்ணத் தோன்றுகிறது. பைக் ரேஸிங் காட்சிகளிலும், பாண்டிச்சேரியைப் படம்பிடித்திருக்கும் விதத்திலும் மட்டுமே குருதேவ் மற்றும் கோபியின் கேமிராக்கள் வேலை செய்திருக்கின்றன.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கோடிகளை தாண்டிய தளபதி வீடியோக்கள்- எத்தனை தெரியுமா?
விஜய்யுடன் அடுத்தப்படம், அஜித்தின் அர்ப்பணிப்பு- விவேகம் குறித்து சிவா அதிரடி பேட்டி
விஜய்யை விட்டுக்கொடுக்காத அஜித்! இதுபோதுமே வேறென்ன வேண்டும்
பிடிக்கல… மாத்துங்க! அஜீத் மறுப்பால் அதிர்ச்சி!
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்