Home  |  திரை உலகம்

இருக்கு ஆனா இல்லை ( Irukku Aana Illai )

இருக்கு ஆனா இல்லை ( Irukku Aana Illai  )

Movie Name: Irukku Aana Illai இருக்கு ஆனா இல்லை
Hero: Vivanth
Heroine: Eden Kuriakose
Year: 2014
Movie Director: K. M. Saravanan
Movie Producer: Varam Creations
Music By: Shammeer


ஹீரோ ஒரு ஆக்சிடெண்ட்டில் சிக்கிப் பிழைக்கிறான். அதே ஆக்சிடெண்ட்டில் முன்பின் தெரியாத ஒரு பெண்(ஹீரோயின்) இறக்கிறார். ஹீரோவைத் தொடர்ந்து வந்து, பேயாக ஹீரோ வீட்டிலேயே தங்குகிறார். தான் யார் என்று கண்டுபிடித்துத் தரும்படி ஹீரோவைக் கேட்கிறார். அந்த பேயின் பேக்ரவுண்டை ஹீரோ கண்டுபிடிப்பதும் ஆபத்தில் இருக்கும் ஹீரோயினின் சகோதரியைக் காப்பாற்றுவதுமே கதை. ஆதவன் தன் நண்பர்களுடன் சரக்கடித்தபடியே ஹீரோவின் கதையைச் சொல்வதாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். அது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அடுத்து நடக்கும் ஆக்ஸிடெண்ட்டும்,

தொடர்ந்து வரும் பேய் எபிசோடும் ரசிக்க வைக்கின்றன. பிறகு பேய் ஹீரோயினும்(அறிமுகம் ஈடன்) ஹீரோவும் நண்பர்கள் ஆகிறார்கள். தான் யார் என்று மறந்து போய்விட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துச் சொன்னால், தான் திரும்பிப் போய்விடுவதாகவும் ஹீரோயின் சொல்கிறார். பிரச்சினையே அதில் தான் ஆரம்பிக்கிறது. கண்டுபிடித்தவுடனே படம் முடிந்துவிட்ட ஃபீலிங் நமக்கு வந்துவிடுகிறது. ஹீரோயின் ட்வின்ஸ் என்றும் இன்னொரு ஹீரோயின் ஹாஸ்பிடலில் ஆபரேசனுக்காக அட்மிட் ஆகியிருப்பதாகவும், அவரைக் கொன்றுவிட்டு அவர் உடல் உறுப்புகளைத் திருட ஹாஸ்பிடல் முயல்வதாகவும் கதையைக் கொண்டுபோய் இருக்கிறார்கள். தன் அக்காவைக் காப்பாற்றும்படி ஹீரோயின் கேட்க, ஹீரோ அந்த வேலையையும் ஒத்துக்கொள்கிறார். அதையாவது அதிரடி ஆக்சன்களுடனோ, சஸ்பென்ஸுடனோ சொன்னார்களா என்றால், இல்லை. சப்பையான வில்லன் டாக்டர், அவரை எதிர்கொள்ள முடியாமல் கிளைமாக்ஸ்வரை சுற்றிசுற்றி ஓடிவரும் ஹீரோ என படம், டெம்போவை இழக்கிறது.

ஆதவனும் இடைவேளைக்குச் சற்றுமுன் காணாமல் போகிறார்.
ஹீரோயின் யார் என்று கண்டுபிடிப்பது தான் ஹீரோவின் குறிக்கோள். இவ்வாறு குறிக்கோள் அமைக்கும்போது, ஹீரோயின் யார் எனும் உண்மை அதிர்ச்சியூட்டுவதாகவும், ஹீரோவுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஹீரோவின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
கிளைமாக்ஸில் விறுவிறுப்பாகி படம் முடிகிறது. இயக்குநர் சரவணனுக்கு இது நல்ல ஆரம்பம். இன்னும் இறங்கி அடிக்க வேண்டும்,

பேய் என்றாலும் அழகாக இருக்கிறார். . படத்தின் கதையே இவரை மையப்படுத்தித் தான். புதுமுகம் என்றாலும், அந்த கேரக்டரை அசால்ட்டாக செய்திருக்கிறார். நல்ல நடிப்பு. ஹீரோவை ஆரம்பத்தில் மிரட்டுவது, பின் நட்பாவது, பிரியும்போது காதலை உணர்வது என ரசிக்க வைக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் ’சைண்டிஸ்ட் இலக்கியவாதி’ கெட்டப்பில் நல்ல டாக்டராக வருகிறார். ஒரு தயாரிப்பாளர் ஐ.டி.கம்பெனி பி.எல்லாக வந்து, ஆதவனால் கலாய்க்கப்படுகிறார். இன்னொரு தயாரிப்பாளர் ஒரு சீனில் வில்லனாக வருகிறார். படத்தில் வரும் இன்னொரு முக்கிய கேரக்டர், ஹீரோயினின் அம்மா. யாரோ புதுமுகம் நடித்திருக்கிறார். இரண்டாம்பாதியில் கொஞ்ச நேரம் அம்மா செண்டிமெண்ட் ஓடுகிறது. அவர் புதுமுகம் என்பதால், பெரிய அட்டாச்மெண்ட் வரவில்லை. கதையில் அது ஒரு முக்கியமான கேரக்டர் என்பதால் செலவைப் பார்க்காமல், நல்ல அம்மா நடிகையைப் போட்டிருக்கலாம்.

  14 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை