Home  |  நாட்டு நடப்பு

கிரிகெட் டி-20 ஐ பி எல் இன்று முதல் - 34 கோடி பரிசு !!

கிரிகெட் டி-20 ஐ பி எல் இன்று முதல் - 34 கோடி பரிசு !!


இந்தியன் பிரிமியர் லீக் 8வது ஐ.பி.எல் - டி20 கிரிக்கெட் போட்டி துவக்கவிழா இன்று துவங்க உள்ளது.
கொல்கத்தா நகரில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

 

 


இந்தியாவின் விழா எனும் பெயரில் 2 மணி நேரம் இந்த விழா நடக்க உள்ளது.
நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா என பலரும் பங்குபெறும் கண்கவர் நடனம் இடம் பெறுகிறது.

 

 


டாப் நடிகர்கள் சைப் அலி கான், பர்ஹான் அக்தர் மற்றும் இசையமைப்பாளர் பிரிதம் ஆகியோரும் இணைந்து ஆட்ட வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்கின்றனர்.

 

 

இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக எட்டு அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுக்க இருக்கிறார்கள். பின்னர் நடப்பு சாம்பி யன் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், ஐ.பி.எல். கோப்பையை கொண்டு வந்ததும்

 


எட்டாவது தொடர் தொடங்கி விட்டதாக அறிவிப்பார். தொடக்க விழா நிகழ்ச்சிகள் மழையால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சி யை தொடர்ந்து நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

 

சாம்பியனுக்கு 15 கோடி பரிசு - 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மொத்த பரிசு தொகை 34 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வெற்றி அணிக்கு 15 கோடி வழங்கப்படும்.

 


2வது இடம் பிடிக்கும் அணிக்கு 10கோடி கிடைக்கும்.
3வது இடம் பிடிக்கும் அணிக்கு 5 கோடி ரூபாயும்,

 


4வது இடம் பிடிக்கும் அணிக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்படும். இந்த பரிசு தொகையில் பாதியை,
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று ஐபிஎல் விதிமுறை உள்ளது.

 

கொல்கத்தா  t-20  வெற்றி அணி எது - யாருக்கு பரிசு - பாருங்கள் நமது akkampakkam.com

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?