Home  |  நாட்டு நடப்பு

உலகிலேயே மிகச்சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு !!

உலகிலேயே மிகச்சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு !!

நமது இந்திய திருநாட்டின் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த சேவைக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.

 

ஏப்ரல் 28 ம் தேதி ஜோர்டான் நாட்டில் சர்வதேச விமான கவுன்சில் கூட்டம் நடந்தது. அங்கு இந்த விருது நமது டெல்லி விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. வருடம் தோறும் நான்கு கோடி பயணிகளை கையாளும் டெல்லி விமான நிலையம் 2014-ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி விமான நிலையத்தில் 6 உள்நாட்டு விமானங்களையும், 56 சர்வதேச விமானங்களையும் பிரம்மாண்ட ஏர்பஸ் ஏ380 ரக விமானங்களையும் ஒரே நேரத்தில் கையாளும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

 

300-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், டெல்லி விமான நிலையம் 5 புள்ளிகளுக்கு 4.9 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014-15-ம் ஆண்டில் சுமார் 4 கோடி பயணிகளை திறம்பட நிர்வகித்த இந்திரா காந்தி விமான நிலையம் நாளொன்றுக்கு சராசரியாக 885 விமானங்கள் போக்குவரத்தையும், சுமார் 696,000 மெட்ரிக் டன்கள் சரக்குப் போக்குவரத்தையும் கையாண்டுள்ளது.


இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு அதிக சேவை வழங்கி வரும் விமான நிலையமாகவும் டெல்லி உள்ளது. உலகிலுள்ள விமான நிலையங்களின் வர்த்தக சங்கமாக 1991-ம் ஆண்டு சர்வதேச விமான கவுன்சில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?