Home  |  அறுசுவை

நெல்லிக்காய் சாதம் (Indiangosseberry Rice)

தேவையானவை :

 

சாதம் - 1 கப்

பெரிய நெல்லிக்காய் - 6

வர மிளகாய் - 5

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

நெய் - 1 டீஸ் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவைகேற்ப

கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ் ஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 டீஸ் ஸ்பூன்

 

 

செய்முறை :

 

1. நெல்லிக்காயை கொட்டையை எடுத்து,பொடியாகத் துருவி கொள்ளவும்.வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.

 

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்.அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, 3 நிமிடம் வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

 

3.அடுப்பில் இருந்து இறக்கிய நெல்லிக்காய் கலவையுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து, சாதம் குலையாமல் நன்கு கிளறவும்.தனியே சிறிது நெய்யில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கிளறிய சாதத்துடன் சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

Indiangosseberry Rice

Ingredients for Indiangosseberry Rice:

 

Boiled Rice-1 Cup

Large Gooseberry-6

Dry Chilly-5

Turmeric Powder-2 Pinch

Ghee-1 Tsp

Curry Leaves-2 Bunch

Salt-as Needed

Mustarrd-1/4 Tsp

Sesame oil-1 Tbsp

Black Gram-1/2 Tsp

Bengal Gram-1/2 Tsp

Asafoetida-1/4 Tsp

Roasted Gram-2 Tsp

 

Procedure to make Indiangooseberry Rice:

 

1. Remove the seed of gooseberries and make grated gooseberry. Place the boiled rice in a plate.

2. Heat oil in a pan, add mustard, black gram, bengal gram, curry leaves, dry chilly, asafoetida, turmeric powder and let to splutter. Then add grated gooseberries and stir well for 3 minutes. When the smell comes out, remove form flame.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!