இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அணுமின் நிலையங்களில் நிர்வாக பணிகளுக்கான பட்டதாரிகள் எக்சிக்யூக்டிவ் டிரெய்னீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நமது இந்திய திருநாட்டின் அணுசக்தித் துறையின் கீழ் உள்ள இந்திய அணுசக்தி கழகம் அணுமின்நிலையத்திற்கான இடம் தேர்வு, அதன் கட்டுமானம், பராமரிப்பு, மறு சீரமைப்பு, நவீனப்படுத்துதல், அணுமின் நிலையங்களை தரம் உயர்த்துவது, அணுக்கழிவு மேலாண்மை, காலாவதியான அணு உலைகளை செயலிழக்க வைப்பது ஆகிய பணிகளை செய்து வருகிறது.
பணியின் பெயர்
எக்சிக்யூக்டிவ் டிரெய்னீஸ்:
மொத்த காலி பணி இடங்கள் 110 இதில் பொது - 37, எஸ்சி - 13, எஸ்டி - 31, ஒபிசி - 29.
மொத்தமுள்ள 110 இடங்களில் மெக்கானிக்கல் - 55, எலக்ட்ரிக்கல் - 15, எலக்ட்ரானிக்ஸ் - 8, கெமிக்கல் - 15, இன்ஸ்ட்ரூமென்டேசன் - 7, இன்டஸ்ட்ரியல் மற்றும் பயர் சேப்டி - 10 என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு:
20.3.2015 தேதியன்று 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு சலுகை உண்டு.
கல்வித்தகுதி
இதற்கு விண்ணப்பதாரர்கள் அந்தந்த பிரிவில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (பொறியியல்) ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்டெக் படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை எழுத்துத்தேர்வு சென்னை, கோவையிலும், கேரளாவில் திருவனந்தபுரம், மற்றும் கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட 22 இடங்களில் நடைபெற உள்ளது.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு வரும் ஏப்ரல் 14 முதல் 20ம் தேதிக்குள் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பின் அவர்கள் 'சயின்டிபிக் ஆபீசராக' பணியிடம் வழங்கி நியமிக்கப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு www.npcilonline.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
வெற்றி பெறுங்கள் நாளை நமதே !!
|