Home  |  நாட்டு நடப்பு

153 ரன்னில் சுருண்ட இந்தியா... அதிரடியான துவக்கத்தில் இங்கிலாந்து...

153 ரன்னில் சுருண்ட இந்தியா... அதிரடியான துவக்கத்தில் இங்கிலாந்து...

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகத்தில் திணறிய இந்திய அணி 153 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து விளையாடுகிறது. முதல் இரு லீக் போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 9 புள்ளிகள் பெற்றுள்ளது. இதில் வீழ்ந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்னும் புள்ளிக்கணக்கை துவக்கவில்லை. இந்நிலையில், பிரிஸ்பேனில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் (காயம்), அஷ்வின் நீக்கப்பட்டு ராயுடு, பின்னி தேர்வு செய்யப்பட்டனர். இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் திரும்பினார்.

இந்திய அணிக்கு தவான், ரகானே ஜோடி துவக்கம் தந்தது. கடந்த போட்டியில் 2 ரன்களில் அவுட்டான தவான், இம்முறை ஒரு ரன்னில் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.

ஸ்டீவன் பின் ‘வேகத்தில்’ ரகானே (33), கோஹ்லி (4) ஆட்டமிழந்தனர். ரெய்னாவும் (1) அணியை கைவிட்டார். ராயுடு 23 ரன்களில் அவுட்டானார். ஸ்டீவன் பந்துவீச்சில் தோனி (34), அக்சர் (0) அடு்த்தடுத்து ஆட்டமிழந்தனர்.

புவனேஷ்வர் 5 ரன்கள் எடுத்தார். ஸ்டீவர்ட் பின்னி 44 ரன்களில் வெளியேறினார். ஷமி ஒரு ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 39.3 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் ஸடீவன் பின் 5, ஆண்டர்சன் 4 விக்கெட் வீழ்த்தினர்.

சற்று முன் வரை இங்கிலாந்து அணி 4 ஒவர் முடிவில் 30 ரன்னுக்கு ஒரு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?