Home  |  திரை உலகம்

சத்தம் இல்லாமல் சாதித்த ஐ படத்தின் டீசர் !!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக்கி உள்ள ஐ திரைப்படம், இதுவரை தமிழ்சினிமாவில் நிகழ்த்தப்பட் பல சாதனைகளை தவிடு பொடியாக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இது வரை தமிழ் சினிமாவில், ஒரு திரைப்படம் அதிகபட்சமாக உலக அளவில் 2500 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையை மிஞ்சுகிற அளவுக்கு ஐ படத்தை 20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தார்.  


தியேட்டர் ரிலீஸ் ஒரு புறம் இருக்க தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறது ஐ படம். அதாவது தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே டீஸர் ஒன்றை அதிகம் பார்த்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடித்து ஏற்கெனவே ஐ படம் சாதித்திருக்கிறது. 


தற்போது 80 லட்சம் பார்வையாளர்களின் எண்ணிக்கை என்ற புதிய மைல்கல்லையும் எட்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் டீஸர், டிரைலர் மட்டுமே இவ்வளவு பெரிய எண்ணிக்கையை சந்தித்துள்ளன. 


முதன்முறையாக ஒரு தமிழ்ப்படம் இந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. ஷங்கரின் ஐ படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பால் இவ்வளவு பெரிய சாதனையை அது நிகழ்த்தியிருக்கிறது. 


இதற்கு முன்பு ரஜினியின் கோச்சடையான் படத்தின் டிரைலர்தான் (46 லட்சத்திற்கும் மேற்பட்டோர்) அதிக ரசிகர்கள் பார்த்த சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த சாதனையை 15 நாட்களிலேயே முறியடித்த ஐ திரைப்படம் தற்போது 50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்து விரைவில் ஒரு கோடியை தொட இருக்கிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்