Home  |  திரை உலகம்

லிங்காவுக்கு பிறகு தான் ஐ !!

தமிழ் ரசிகர்கள் ஆவளோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ரஜினி நடித்த லிங்கா, ஷங்கர் இயக்கிய ஐ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.  


இவ்விரு படங்களையும் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருகிறது என்றால் அது மிகையாகாது. 


கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த, லிங்கா திரைப்படம் டிசம்பர் 12ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.அதே சமயம் அடுத்த எதிர்பார்ப்பான ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்ற ஆவலும் எழுந்துள்ளது. ஐ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. 


லிங்கா படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் பட்சத்தில் ஐ படத்தை டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள். 


வெளியீடு தள்ளிப்போகும் பட்சத்தில்,  பொங்கலுக்கு கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ஆனால், ஐ திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதில் ஒரு சிக்கல் உள்ளதாம். படத்தை தெலுங்கில் மிகப் பெரிய விலைக்கு விற்றுள்ளதால் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டால்தான் அங்கும் நல்ல வசூலைப் பெற முடியும். 


ஆனால், தெலுங்கில் பொங்கலுக்கு பவன் கல்யாண், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள படங்கள் வெளிவர உள்ளதால் டப்பிங் படமான ஐ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாம். 


அதனால், ஷங்கரின் ஐ படத்தை பெரும்பாலும் டிசம்பர் 25 லே வெளியிட முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்களாம் படக்குழுவினர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்