Home  |  திரை உலகம்

எனக்கு மணிரத்னமும், புதுமுக இயக்குனரும் ஒன்றுதான் !! கவிஞர் வைரமுத்து !!

எனக்கு இயக்குனர் மணிரத்னமும் ஒன்றுதான், புதுமுக இயக்குநரும் ஒன்றுதான். இருவருக்கும் ஒரே மாதிரி உழைப்பைத்தான் தருகிறேன் என காவிய கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

 

புதுமுக இயக்குனர் ஏ.கே.மைக்கேல் இயக்கத்தில், ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக் நடித்துள்ள படம் ‘ஈரவெயில்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். 

 

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது,  இந்த மேடையில் பேசிய அனைவரும் என்னையும், என் எழுத்துக்களையும் புகழ்ந்து சொன்னார்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இதை எனக்கான பெருமையாக எடுத்துக் கொள்ள மாட்டேன். தமிழுக்கான பெருமையாகத்தான் எடுத்துக்கொள்வேன்.

 

இயக்குனர் மணிரத்னம், ‘ராவணன்' படத்தை தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கினார். இந்தியில், குல்சார் பாட்டெழுதினார். தமிழில், நான் எழுதினேன். இந்தியும், தமிழும் அறிந்தவர்கள் இரண்டு பாடல்களையும் கேட்டார்கள். இந்தி பாடலை விட, தமிழ் பாடல் சிறப்பாக இருக்கிறதே என்று என்னிடம் சொன்னார்கள்.‘‘இருக்கலாம். குல்சார் என்னை விட சிறந்த கவிஞர். ஆனால் தமிழ், இந்தியை விட சிறந்த மொழி. அதனால் இருக்கலாம்'' என்றேன். 

 

எனக்கு வரும் பெருமைகளை எல்லாம் தமிழுக்கே காணிக்கை ஆக்குகிறேன்.

உணர்ச்சியின் உச்சம்தான் கவிதை. நாற்பது காட்சிகளில் சொல்வதை நான்கு வரியில் சொல்வதுதான் பாட்டு. ஒருவன் கஞ்சன். அதை எப்படி சொல்வது? ‘எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன். நாய்த்தோலில் வடிகட்டிய கஞ்சன்' என்று சொல்லலாம். ஆனால் என் நண்பன் ஒருவன் சொன்னான். ‘‘அவன் மகா கஞ்சன். தேனிலவுக்கு கூட தனியாகத்தான் போய் வந்தான்.''

 

 

இப்படி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் வெளிப்பாட்டு உச்சம் ஒன்று உண்டு. அந்த உத்தியைத்தான் பல பாடல்களில் நான் கையாளுகிறேன்.‘ஈரவெயில்' படத்துக்கு இயக்குநர் மைக்கேல் உருக்கமான காதல் கதை ஒன்றை சொன்னார். கும்பகோணம் திருவிழா கூட்டத்தில் ஒரே ஒருமுறை பார்த்த பெண்ணை சென்னையில் தேடி அலைகிறான், ஒரு இளைஞன். அந்த தேடலே இந்த படத்தில் ஒரு பாடல் ஆகிறது.

 

‘‘சென்னை என்பது கட்டடக் காடு...இதிலே என் மலர் எந்த மலர்'' என்று அந்த பாடல் தொடங்குகிறது. அந்த பல்லவியின் இறுதியில் அழுத்தமான ஒரு வரியை எழுதியிருக்கிறேன். ‘‘உன்னைக் காணாவிட்டால் - கடற்கரையோரக் காக்கைகள் சாப்பிடக் கண்களைப் பிய்த்து எறிவேன்'' என்று காதலன் பாடுவதாக எழுதியிருக்கிறேன்.

 

பெரிய இயக்குனர்களுக்கு வழங்கும் அதே உழைப்பைத்தான் புதிய இயக்குனர்களுக்கும் வழங்குகிறேன். எனக்கு மணிரத்தினமும் ஒன்றுதான்... மைக்கேலும் ஒன்றுதான்.

 

இன்று படத் தயாரிப்பு எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் வெற்றியின் விகிதாசாரம் குறைந்து கொண்டே வருகிறது. திரையரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிகிறது. இயக்குனர்கள் நல்ல கதைகளோடு களம் இறங்கினால்தான் வெற்றி காண முடியும். படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள். உங்கள் ஊரில், உங்கள் தெருவில், அடுத்த வீட்டில் கற்பனைக்கு சிக்காத ஆயிரம் நிஜ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. உண்மையுள்ள திரைப்படத்தில் உணர்ச்சி இருக்கும். உணர்ச்சி உள்ள திரைப்படம் வெற்றி பெறும் இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்