Home  |  திரை உலகம்

ஐ ( I )

ஐ ( I )

Movie Name: I ஐ
Hero: VIKRAM
Heroine: Amy Jackson
Year: 2014
Movie Director: S.SHANKAR
Movie Producer: OSCAR MOVIES
Music By: A.R.RAHMANசராசரிக் கதையை சூப்பர் கதையாக ஆக்குவது ஷங்கர் மற்றும் பி.சி.ஸ்ரீராமின் பிரம்மாண்டமான காட்சியமைப்பும் விக்ரமின் நடிப்பும் தான். ஆளான ஷங்கர், இதிலும் அதையே செய்திருக்கிறார். ஹீரோ வடசென்னை சேரிப்பையனாக இருந்தாலும், காட்சிகளில் ரிச்னெஸ்ஸைக் கொண்டுவந்துவிடுகிறார். மணக்கோலத்தில் இருக்கும் ஹீரோயினை, அகோர தோற்றமுடைய விக்ரம் கடத்துவதுடன் படம் ஆரம்பிக்கிறது. நிகழ்காலம் கொஞ்சம், ஃப்ளாஷ்பேக் கொஞ்ச நேரம் என்று படம் நகர்கிறது. சில இடங்களில் இந்த ஃப்ளாஷ்பேக் யாருடைய வியூவில் நகர்கிறது என்று குழப்பமும் உள்ளது.

மிஸ்டர் இந்தியா கனவோடு இருக்கும் விக்ரம், ஜிம் நடத்துகிறார். அங்கே சந்தானமும் பவர் ஸ்டாரும் நடத்தும் காமெடி ஒரு பக்கம் இருக்க, மாடலாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு பிரபல மாடலாக இருக்கும் வில்லன் தரும் தொல்லைகள் என ஒரு பக்கம் கதை நகர்ந்துசெல்கிறது. வில்லன் தரும் தொல்லைகள் அதிகமாவதால் விக்ரமை போட்டிக்கு மாடலாக களமிறக்குகிறார் எமி. நடிப்பு வராமல் போக, எமி விக்ரமைக் காதலிப்பதாக பொய் சொல்லி கெமிஸ்ட்ரியை உண்டாக்குகிறார். அதனால் நடிப்பு வந்து விலாசிதல்லுகிறார். பிரபல மாடலாகிறார், பின்னர் கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள் என்பது உண்மையான எதார்த்தம்.ஒவ்வொரு எதிரியையும் விக்ரம் தண்டிப்பதும்.., ஃப்ளாஷ்பேக்கும் ஒன்றன்பின் ஒன்றாக நகர்வதால் படம் விறுவிறுவென்று நகர்கிறது. வாய்க்குள் ஈ போவதுகூட தெரியாமல் பார்க்க வைக்கும்படியான பிரம்மாண்ட காட்சியமைப்பு, எமியின் ' தாராள " அதிகம்., நடிப்பு, சுவாரஸ்யமான சீன்கள் என்று கலந்து கொடுத்திருப்பதால் படத்தை சங்கரின் படமென உறுதி செய்ய போதும்.

அந்த கேரக்டருக்காக அப்படியே உடம்பை உருக்கி, ஏற்றி என்னன்னெமோ விக்ரமுக்கு ஒரு சல்யூட். சென்னைத் தமிழும், பாடி பில்டர் உடம்பு என அட்டகாசம். ஸ்டைலிஷான மாடலாக வரும்போதும் ரியல் மாடல் சான்சே இல்ல. விக்ரம் நடிப்பில் புதிய பரிணாம், எமி ஜாக்ஸன் ஹாலிவுட் பட ரேஞ்சில் காவர்ச்சி அள்ளுது. மெழுகுபொம்மை போல் இருப்பார் என்பதால், மாடல்-க்கு கச்சிதம். சந்தானம் இண்டர்வெல்லுக்குப் பின் சந்தானம் தண்டிக்கப்பட்ட எதிரிகளிடம் பேட்டி எடுப்பதும், வழக்கம்போல் ஒன்லைன்களால் அமர்க்களம் செய்திருக்கிறார். வில்லனாக ராம்குமார் (சிவாஜி மகன் ) வருகிறார். மாடலாக வில்லனும் நல்ல நடிப்பு சூப்பர். அதுக்கும் மேல.... நடித்திருப்பது சுரேஷ் கோபி செம. அகோர காட்சிகள்தான் ஒருவிதமான அருவருப்பை காட்டுகிறது. குழந்தைகள் பயப்படுவது உண்மை. விக்ரம் மட்டும் இல்லன படம்...??? பி.சி.ஸ்ரீராமின் கேமிரா பிரம்மாண்டம். ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையும் , பாடலும் செம ஹிட்.

படமா இது!!!!! அதுக்கும் மேல....

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்