Home  |  திரை உலகம்

ஐ திரைப்படம் உருவான விதம் !!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் நீண்ட கால இயக்கத்தில் விக்ரம் - எமி எமிஜாக்சன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ஐ. 


இந்த படத்தில் சியான் விக்ரம் பல கெட்-அப்களில் நடித்து இந்திய திரையுலகையே அசர வைத்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சுரேஷ் கோபி, சந்தானம், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 


பி.சி. ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  


சமீபத்தில் வெளியான ஐ திரைப்படத்தின் டீசரும், பாடல்லும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல், ஐ படத்தின் டீசர் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகிறது. 


இந்நிலையில் ‘ஐ’ படம் உருவான விதம் குறித்து ஒரு வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதில் படம் உருவானவிதம் மற்றும் பாடல்கள் உருவானவிதம் பற்றி இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மதன் கார்க்கி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கூறியுள்ளனர்.


இதில் ஷங்கர் கூறும்போது, ‘இப்படத்திற்கு ஏற்ற தலைப்பு அழகன் அல்லது ஆணழகன் என்று வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு தலைப்பில் ஏற்கனவே படங்கள் வெளியாகிவிட்டது. எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு எழுத்தில் தலைப்பு வைக்க வேண்டும் என்று ஆசை. அதேபோல் ‘ஐ’ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு. ஐ-க்கு தமிழில் என்ன அர்த்தம் எல்லாம் இருக்கிறது என்று தேடினோம். அப்போது ‘ஐ’ என்றால் அழகு என்று ஒரு அர்த்தம் இருந்தது. உடனே இதுதான் சரியான தலைப்பு என்று வைத்தேன்’ என்றார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்