Home  |  திரை உலகம்

ஷங்கரின் ஐ வசூல்.. ஒரு சின்ன அப்டேட் !!

ஷங்கரின் ஐ வசூல்.. ஒரு சின்ன அப்டேட் !!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற ஐ திரைப்படம் கடந்த ஜனவரி 14ம் தேதி வெளியானது. கத்தி, லிங்கா படங்களின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ தற்போது அதைச் செய்யத் தவறி விட்டது.

அதேசமயம், கேரளாவில் மட்டும் அது முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. மற்றபடி தமிழகத்தில் இப்படம் நேற்று வரை நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. வார நாட்கள் இன்று தொடங்குவதால் இதன் தலைவிதி அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

ஐ திரைப்படம் தற்போது, தமிழ், தெலுங்கு, இந்தியில் இதுவரை இந்தியாவில் 55.62 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வசூலித்துள்ளதாம்.  இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் பொங்கல் விடுமுறையை வைத்து வசூலில் தொய்வில்லாத நிலையில் ஐ உள்ளது.

தமிழ் ஐ படம் ரூ. 31 கோடியை இதுவரை இந்தியாவில் வசூலித்துள்ளது. தெலுங்குப் படம் ரூ. 22 கோடியை வசூலித்துள்ளதாம். இந்தி வசூல் ரூ. 1.95 கோடியாம். 3 நாள் கணக்கு இது.

இந்தியாவில் முதல் மூன்று நாட்களில் இப்படம் அனைத்துப் பதிப்பிலும் சேர்த்து ரூ. 55.62 கோடி வசூலித்துள்ளது.

கத்தி, லிங்கா ஆகிய படங்கள் முதல் நாளில் ரூ 12 கோடிக்கு மேல் வசூலித்திருந்தன. அந்த சாதனையை முறியடிக்கத் தவறி விட்டதாம் ஐ. இப்படம் முதல் நாளில் ரூ. 8 கோடியை மட்டுமே வசூலித்ததாம்.

தெலுங்குப் பதிப்பு ஐ- யானது, ஆந்திரா, நிஜாம் பாக்ஸ் ஆபீஸில் டப்பிங் படத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

கேரளாவில் முதல் நாளில் வசூல் சாதனையை ஐ செய்துள்ளதாம். வரலாறு காணாத வசூல் என்று சொல்கிறார்கள்.

பொங்கலும் முடிந்து விட்டது, விடுமுறைகளும் முடிந்து விட்டன. எனவே இன்று முதல் ஐ படத்திற்கு வரும் கூட்டத்தைப் பொறுத்தே அது போட்ட முதலை எடுக்கமா அல்லது மண்ணை கவ்வுமா என்பது தெரியவரும்.

  18 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்