Home  |  திரை உலகம்

மாமனாரை வைத்து படம் இயக்க ஆசைப்படும் மருமகன் !!

ரஜினியை வைத்து படம் இயக்க ஆசையாக இருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

 

இந்திய திரையுலகை பொறுத்தவரை தனுஷுக்கு என்றே ஒரு தனி இடம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆடுகளம் படத்தில் இவர் நடித்த நடிப்பும், ஒய் திஸ் கொலைவெறி பாடலாலும் தான் இவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதனால் நடிகர், பாடகர் , பாடல் எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல துறைகளில் களம் இறங்கி வருகிறார் தனுஷ். பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும், அவற்றை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறாராம் தனுஷ். தற்போது தமிழில் 'வேலையில்லா பட்டதாரி', 'அனேகன்', வெற்றிமாறன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதுப்படம் என வரிசையாகக் கமிட் ஆகியிருக்கிறார். இந்நிலையில், தனக்கு ஹாலிவுட் வாய்ப்பு வந்தது குறித்துப் அவர் பேசியதாவது, பிரிட்டன், ஸ்பானிஷ் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகள் வந்தன. படத்தின் முழுக்கதையையும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். இங்கு படவாய்ப்புகள் நிறைய இருந்ததால் அந்தப் படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. 

 

பாலிவுட்டில் அறிமுகமாகும் போது சிரித்தார்கள். அதைப் போல ஹாலிவுட் என்றவுடனும் சிரிப்பார்கள். எனக்கே சிரிப்பு தான் வருகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை எதுவும் சாத்தியம் தான். முடியாதது எதுவும் இல்லை. நான் இயக்குனரானால் ரஜினி, சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோரை இயக்க ஆசை என கூறியுள்ளார் தனுஷ்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்