Home  |  திரை உலகம்

காசுக்காக சமுதாயத்தை சீரழிக்கும் காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் - பூர்ணா !!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூர்ணா, அதன் பின்னர் வேலூர் மாவட்டம், கந்தகோட்டை, துரோகி ஆகிய படங்களில் நடித்தார். படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் தோல்விப்பட நடிகை என்ற முத்திரையுடன் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் பூர்ணா. 

 

இதனால் சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், தற்போது ஜன்னல் ஓரம், தகராறு உள்பட சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி மீண்டும் கோடம்பாக்கத்தில் பிரவேசித்துள்ளார். இந்த முறை நான் தோற்க மாட்டேன். காரணம் எனக்கு கிடைத்திருக்கிற கதைகளும், ஹீரோக்களும் வெற்றியாளர்கள். அதனால் அவர்கள் புண்ணியத்தில் நானும் ராசியான நடிகையாகி விடுவேன் என்கிறார் பூர்ணா.

 

சரி இரண்டாவது ரவுண்டில் இளம் ரசிகர்களை குஷிபடுத்தும் ஐடியா ஏதேனும் உள்ளதா? என்று அவரைக்கேட்டால், இளம் ரசிகர்களை கலகலப்பான, கிளுகிளுப்பான நடிப்பால் குஷிபடுத்த தயாராக இருக்கிறேன். ஆனால், ஆபாசமாக நடித்து குஷிபடுத்த தயாராகயில்லை. காரணம், பெண்கள் படுகவர்ச்சியாக உடையணிவதால் தான் இளம் ரசிகர்கள் தவறான மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால்தான் நாட்டில் பல இடங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது. இதை சாதாரண பெண்கள் மட்டுமின்றி, சினிமாவில் நடிப்பவர்கள் செய்தாலும் தவறு என்பது என் கருத்து. அதனால் காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சமுதாயத்தை கெடுக்கும் செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டேன் என பூரிக்கிறார் பூர்ணா.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்