Home  |  நாட்டு நடப்பு

ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது !!

ஐதராபாத் அணி  அபார வெற்றி பெற்றது !!

 

ஐ ப எல் - பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

 

அதில் விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சமின்றி நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூர் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது


முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பெங்களூர் அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். வீரர்கள் கெய்லே மற்றும் விராத் கோஹ்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

 


கடந்த போட்டியில் கலக்கிய கெய்லே இந்த போட்டியில் ரசிகர்களை மிகவும் ஏமாற்றினார். கெய்லே 21 ரன்களில் குமாரின் பந்தில் அவுட் ஆனார்.

 

பிறகு களமிறங்கிய கேப்டன் தோனி ஓரளவு நிலைத்து ஆடியபோதும் 41 ரன்களில் அவுட் ஆனார்.
பெங்களூர் அணியின் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் 46 ரன்கள் எடுத்திருந்தபோதிலும்,


மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால், பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது, தொடக்கத்தில் இருந்தே இவர்களின் ஆட்டம் சூடு பிடித்தது. குறிப்பாக ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 27 பந்துகளில் 57 ரன்கள் அடித்து பெங்களூர் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

 


வீரர் தவானும் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து மிரட்டினார். இறுதியில் ஐதராபாத் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டக்காரர வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். எனவே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது . ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?