Home  |  திரை உலகம்

லிங்கா திரைப்படம் எப்படி இருக்கு?

லிங்கா திரைப்படம் எப்படி இருக்கு?

கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் லிங்கா. ரஜினியின் பிறந்தநாளான இன்று வெளியாகி இருக்கிறது. லிங்கா திரைப்படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் படையெடுத்துக் கொண்டிருக்கிறது. சரி வாங்க லிங்கா படம் பற்றி பார்ப்போம்.


சோலையூர் என்ற கிராமத்தில் மிகப்பெரிய பஞ்சம் வருகிறது. அந்த பஞ்சத்தை போக்கவும், விவசாயத்தினை செழிக்கவும் அந்த ஊரில் ஒரு அணை கட்ட வேண்டும் என கலெக்டர் ரஜினி முடிவு செய்கிறார். ஆனால் ஆங்கிலேய அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கலெக்டர் ரஜினி, எஞ்சினியர் ரஜினியாக மாறி தானே சொந்த செலவில் அணை கட்டுகிறார்

அணை கட்டுவதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்த ஆங்கிலேய அரசு உள்ளூர் பிரமுகர் ஆர்.சுந்தர்ராஜனை நயவஞ்சகமாக பயன்படுத்துகிறது. அணை கட்டினால் ஊரில் உள்ள நிலம் முழுவதும் முழ்கிவிடும் என்று சுந்தர்ராஜன் வதந்தியை பரப்புகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு ரஜினி தனது சொந்த நிலத்தை தருவதாக உறுதி கூறுகிறார்.

ஒரு வழியாக அணை கட்டி முடித்து திறக்கும் தருவாயில் அணையை திறந்து வைக்க வேண்டுமென்றால் அதற்கு பதிலாக ரஜினியிடம் உள்ள சொத்து முழுவதையும் தரவேண்டும் என்று ஆங்கிலேய அதிகாரி கேட்கிறார். ரஜினியும் சொத்து முழுவதையும் தருகிறார். தங்களுக்கு கொடுத்த நிலங்களையும் சேர்த்து ரஜினி ஆங்கிலேய அதிகாரிக்கு கொடுத்துவிட்டதாக மீண்டும் ஒரு வதந்தி பரவ, கிராம மக்கள் ரஜினி மீது வெறுப்படைந்து ரஜினியை ஊரில் இருந்தே விரட்டி விடுகின்றனர். அவர் கட்டிய கோவிலையும் மூடி விடுகின்றனர்.

இந்நிலையில் அணை உறுதியாக இருக்கின்றதா? என்று பரிசோதிக்க ஒரு குழுவை அனுப்புகிறது ஆங்கிலேய அரசு. குழுவை சோதனை செய்யும் தலைமை எஞ்சினியரை மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிடுகிறது. இறப்பதற்கு முன் அந்த எஞ்சினியர் கோவிலை திறந்தால்தான் இந்த ஊரை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஊர்பெரியவர் விஜயகுமாரிடம் கூறிவிட்டு இறந்துவிடுகிறார். கோவிலை திறப்பதற்காக ரஜினியின் வாரிசை ஊர் மக்கள் தேடுகிறார்கள்.


சென்னையில் சந்தானத்துடன் சிறுசிறு திருட்டுகள் செய்து வரும் ரஜினியை தேடி கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து செல்கிறார் அனுஷ்கா. அங்கு தன்னுடைய தாத்தா ரஜினியின் கதையை விஜய்குமார் மூலம் கேட்டு அணையை மீண்டும் திறக்க ரஜினி எடுக்கும் முயற்சிகள்தான் மீதிக்கதை.


சூப்பர் ஸ்டார் வயசானாலும் அவரது ஸ்டைல் துளிகூட குறையவில்லை, அவரது அறிமுக பாடலில் ஆடும் ஆட்டம், சந்தானத்துடன் இணைந்து அவர் அடிக்கும் லூட்டிகள் அனைத்தையும் பார்க்கும் போது தலைவருக்கு இப்ப தான் நாற்பது வயது என்று தோன்றுகிறது, அசத்துறீங்க தலைவா…அதிலும் அந்த ரயிலில் தலைவர் போடும் சண்டை தாறுமாறு.

முதல் பாதியில் கிளாமராக வரும் அனுஷ்கா அவரது கதாபாத்திரத்தை கச்சிதாக செய்திருக்கிறார், இரண்டாம் பாதியில் வரும் சோனாக்‌ஷி சிங்கா கிராமத்து பெண் வேடத்தில் பின்னி எடுக்கிறார். சந்தானம், கருணாகரனின் காமெடிகள் கலக்கல்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது, பின்னனி இசை படத்திற்கு பலம், ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் ஆங்லேயர் ஆட்சிகளை நேரில் பார்த்து போல் இருந்தது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முதல் பாதி காமெடி கலாட்டா, இரண்டாம் பாதி செண்டிமெண்ட், ஆக்ஸன் என நகர்கிறது.

 

  11 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்