Home  |  ஆரோக்கியம்

முகப்பருவால் அவதி படுபவரா நீங்கள்... முதலில் இத படிங்க....

முகப்பருவால் அவதி படுபவரா நீங்கள்... முதலில் இத படிங்க....

பருவ வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளுள் முகப்பருவும் ஒன்று.

உணவு முறையில் தேவை மாற்றம் :

பருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும் சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுதான் தேவை.

ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக் காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன.

தண்ணீர் அதிகம் குடிங்க :


நாள் ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.



நச்சுக்களை வெளியேற்றும் நன்னாரி டீ :

 

 

10 கிராம் நன்னாரி வேருடன் மல்லி விதை, பெருஞ்சீரகம் தலா அரை டீஸ்பூன் சேர்த்து, நன்றாகப் பொடிக்கவும். இதில், ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, ஒரு டம்ளராகச் சுண்டியதும் வடிகட்டவும்.

தினமும் காலையிலும் மாலையிலும் இந்த டீயை அருந்தி வரவும். ரத்தத்திலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்தைச் சீராக்கி, குளிர்ச்சியைத் தரும். நோய்த் தொற்றும் போய்விடும்.



சோப்புக்கு பதில் நலங்கு மாவு :



சோப்புக்குப் பதிலாக, இந்த நலங்கு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். ஒரு கிலோ பாசிப் பயறுடன், 50 கிராம் சந்தனம் மற்றும் கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு தலா 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போக அரிசி (இவை அனைத்துமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) தலா 200 கிராம் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துப் பயன்படுத்தலாம்.

  04 Aug 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!