Home  |  ஆரோக்கியம்

தலைவலி காரணங்களும்... எளிய தீர்வுகளும்....

தலைவலி காரணங்களும்... எளிய தீர்வுகளும்....

காய்கறி விற்பனை செய்பவர்கள் முதல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் வரை பெரும்பாலானோருக்கு தலைவலி என்பது தொடர் கதையாகத்தான் இருக்கிறது. டென்சன், படபடப்பு என தலைவலிக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்தத் தலைவலியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்? எல்லா தலைவலிகளும் ஆபத்தானவையா? தலைவலி வருவதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

காரணங்களும்...  தீர்வுகளும்.....

100-ல் 25 பேருக்கு, கண்களில்  ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. கம்ப்யூட்டர், மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி. 30 வயதைக் கடந்தவர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு தினமும் தலைவலி ஏற்படுகிறது எனில், முதலில் கண் பரிசோதனை அவசியம். கண்களில் ஏற்படும் நரம்புப் பாதிப்புகள் காரணமாக, பார்வைக் கோளாறுகள், குளுக்கோமா போன்ற கண் பிரச்னைகள் இருந்தால், பெரும்பாலும் தலைவலி ஏற்படும். அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் , தலைவலி  வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதித்துக்கொண்டு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள் உட்கொண்டாலே போதும். தலைவலி சரியாகிவிடும்.

சர்க்கரை நோய், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால், சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது அவசியம். பொதுவாக, சர்க்கரை அளவு திடீரென குறைவதோ, அதிகரிப்பதோ கூடாது. சர்க்கரையின் அளவு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்போது, தலைவலி ஏற்படும். எனவே, குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாகச் சாப்பிட வேண்டும். சர்க்கரை அளவு காரணமாகத்தான் தலைவலி ஏற்படுகிறது எனில், வாழ்வியல்முறைகளை மாற்றிக்கொண்டாலே போதும். தலைவலிக்காக மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

முகத்தில் மொத்தம் எட்டு சைனஸ் அறைகள் உண்டு.  அதில் நெற்றிப்பகுதியில் இரண்டு சைனஸ் அறைகள் அமைந்துள்ளன.  சைனஸ் அறை என்பது  ஜன்னல்களைக்கொண்ட, பூட்டப்பட்ட அறை போல இருக்கும். ஏதேனும், பிரச்னையால் சைனஸ் அறை மூடினால், அறைக்குள் சளி பிடித்துவிடும். இதனால், மூக்கு, கன்னம், தலை, நெற்றி ஆகிய இடங்களில் வலி ஏற்படும். சைனஸ் பிரச்னைக்கு அலர்ஜி ஒரு காரணம். மற்றொரு காரணம், இயற்கையிலேயே மூக்கின் நடுவே இருக்கும் எலும்பு வளைந்து இருப்பதுதான்.  சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் தலைபாரம் ஏற்படும். நேராக நின்றால் தலை வலிக்காது.  ஆனால், குனிந்தால் தலைவலி ஏற்படும். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது, குறிப்பிட்ட சூழலில் இருக்கும்போது, குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ளும்போது ஏற்படும் மைக்ரேன் தலைவலியைக் குணப்படுத்த எந்தக் காரணத்தால் தலைவலி ஏற்படுகிறதோ, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதே ஒரே தீர்வு. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் தலைவலி வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்குத் தொடர்ந்து  மூன்று  நாட்களுக்கு மேல் தலைவலி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மைக்ரேன் தலைவலி ஏற்பட குறிப்பிட்டு எந்தக் காரணங்களையும் சொல்ல முடியாது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, மூளையில் இருக்கும் வேதியியல் ரசாயனங்கள்  சரியான விகிதத்தில் சுரக்கவில்லை என்றாலோ, மைக்ரேன் தலைவலி வரும். மைக்ரேன் தலைவலி வம்சாவளியாக வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. மைக்ரேன் தலைவலிக்கு மருத்துவரை நாடுவது அவசியம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொருட்களால் அலர்ஜி தலைவலி இருக்கும். தலைக்குக் குளிப்பது, இரைச்சல் நிறைந்த சூழலில் வசிப்பது, அதிக நேரம் குளிர்சாதன அறையில் இருப்பது, உஷ்ணப் பகுதியில் வேலை செய்வது, தினமும் குறைவான தூக்கம், காலை உணவைத் தவிர்ப்பது,  ஒவ்வாமை தரும் உணவுகளை உட்கொள்வது, மாசுபடிந்த சூழலில் வசிப்பது, காலநிலை மாற்றம், பேருந்து பயணம் போன்றவை பொதுவான காரணிகள்.

வெகு சிலருக்கு மூளையில் கட்டி உருவானால் தலைவலி ஏற்படும். மூளைப் பகுதியில் கட்டி இருந்தால், தினமும் தலைவலி ஏற்படும். காலையில் எழுந்தவுடன் தலைவலி இருந்தாலோ, தலைவலி வரும் சமயங்களில் வாந்தி வந்தாலோ, மூளையில் கட்டி இருக்கலாம். உடலின் மற்ற பாகங்களால் ஏற்படும் தலைவலியைவிட, மூளைப் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளால் தலைவலி வருவது அரிதாகவே இருக்கும்.

தவிர்க்க என்ன வழி....

முதலில் எப்போது தலைவலி ஏற்படுகிறது, அடிக்கடி தலைவலி வருகிறதா என்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகள் சாப்பிட வேண்டும்.

மருத்துவர், மூன்று நாட்களுக்கு மாத்திரை சாப்பிடச் சொன்னால், ஒரே நாளில் தலைவலி நின்றதும், உடனே மாத்திரையை நிறுத்திவிடுவது தவறு.  தொடர்ந்து மூன்று நாட்களும் மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் தலைவலி, முழுமையாகக் குணமடையும்.

மைக்ரேன் தலைவலியால் அவதிப்படுபவர்கள் கோலா, குளிர்பானங்கள், சிட்ரஸ் அமிலம் நிறைந்த உணவுகள், சாக்லேட், சீஸ், இட்லி, பிரெட், தோசை, மோனோ சோடியம் குளுட்டமெட் கலந்த சீன உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் காபி அருந்தினால் தலைவலி நிற்கிறது என்று, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காபி அருந்திக்கொண்டே இருப்பதும் தவறு.  இது சுழற்சியாக மாறி, காபி அருந்தாவிட்டால் தலைவலி ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

சிறு வயதில் இருந்தே சரிவிகித உணவை உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதையும், எட்டு மணி நேர முறையான தூக்கத்தையும் கடைப்பிடித்தால், தலைவலி வராமல் தடுக்க முடியும்.

  27 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!