Home  |  ஆன்மிகம்

சந்தோஷமாக வாழ என்ன வழி

சந்தோஷமாக வாழ என்ன வழி


சந்தோஷமாக வாழ என்ன வழி

‘அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்’ – . நீங்கள் அறிவாளியா? மேதையா? பிரச்னை… பிரச்னை எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை… இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை… பிரச்னை… பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்… தீர்வுகளைத் தேடாமலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போகும்! பிரச்னை என்று வருகிற பலரும், ‘எங்களால இனியும் ஒண்ணா இருக்க முடியாது. பிரியறதுதான் தீர்வு’ என்கிற முடிவுக்குத் தயாராக இருக்கிறார்கள். ‘பஞ்சாயத்து பண்ணுகிறேன்’ என்கிற பெயரில், அவர்களுக்குச் சமரசம் பேச வருகிறவர்களும், இருவரிடமும் அவரவர் தரப்பில் என்ன பிரச்னை எனக் கேட்டு, அதைத் தீர்ப்பதற்குப் பதில், பெரிதாக்கவே செய்கிறார்கள். அதைத் தவிர்த்து, பிரச்னைகளை ஒரு பக்கம் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் உறவை நெருக்கமாக்குவதில் கவனம் செலுத்திப் பாருங்கள்.

கணவன் – மனைவி என்றில்லை… எந்த இரண்டு பேருக்குமான உறவு அல்லது நட்புக்கும் இந்த விதி பொருந்தும். பொதுவாக அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி ஆளுமை கொண்டவர்கள். தனித்தனி மதிப்பீடுகள் கொண்டவர்கள். கலாசாரரீதியில் பார்த்தால், இந்த பேதங்கள் இன்னும் அதிகமாவதை உணரலாம். இப்படி அவரவர் வளர்ந்த, வாழ்ந்த கலாசாரங்களையும் அவர் களுக்குள் பதிந்து போன மதிப்பீடுகளையும் மாற்ற முனைந்தால், கடுகளவு பிரச்னைகூட மலையளவு பெரிதாகவே செய்யும். திருமண உறவுகளில் விஸ்வரூபம் எடுத்து, பிரிவை நோக்கி அழைத்துச் செல்ல அடிப்படையாக அமைகிறது.நீங்கள் நீங்களாகவும், உங்கள் துணையை அவராகவும் இருக்க அனுமதித்துப் பாருங்கள். இருவருக்குள்ளும் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமிருக்காது! பிரச்னை என்று நாம் சொல்கிற பல விஷயங்களும் உண்மையில் பிரச்னையே இல்லை. வாழ்க்கையில் நடக்கக்கூடிய யதார்த்தமான விஷயங்களாகவே இருக்கும். அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதுதான் முக்கியமே.

‘கடவுளே…என் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க எனக்கு தைரியம் கொடு.தீர்க்கவே முடியாத பிரச்னைகளை ஏற்றுக்கொள்ள எனக்குப் பக்குவத்தைக் கொடு…’ – இந்த வரிகள், நம் வாழ்க்கைக்கும் ரொம்பவே பொருத்தம். பிரச்னை என்று பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விஷயமும் பிரச்னைதான். ஒரு மனிதராக நாம் பக்குவப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் அறிகுறி.
நம்மில் பலரும் இன்னும் குழந்தைகளைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறோம். குழந்தை தனக்கு வேண்டியதைக் கேட்டு அடம் பிடிக்கும். அது கிடைத்தால் சந்தோஷப்படும். கிடைக்காவிட்டால் அழுது, புரண்டு அமர்க்களம் பண்ணும். கோபப்படும். பெரியவர்களாகிய நாமும் அப்படித்தானே இருக்கிறோம்? நமக்கு சாதகமான விஷயங்கள் நடந்தால் மகிழ்கிறோம். அப்படி நடக்காத போது கோபப்படுகிறோம். இந்தக் குழந்தை மனநிலையிலிருந்து வெளியே வரும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டாலே பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக.

  24 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!