|
||||
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் ஹன்சிகா !! |
||||
![]() |
||||
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜய்யின் மேனஜர் பி.டி.செல்வக் குமார் தயாரிக்கிறார். முதலில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா அல்லது ஸ்ருதிஹாசன் ஆகிய மூவரில் ஒருவர்தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின்படி, விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருக்கிறார். அதேபோல படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். இதற்காக சுதீப்புக்கு ஆறு கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. |
||||
![]() |
||||
User Comments | |
|
Post your comments |