Home  |  ஆரோக்கியம்

கை கழுவுதல் அவசியமானதா !!

பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டிற்குள் நுழைவார்கள். ஆனால் இந்தப் பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.

 

இன்று உலகில் இறக்கும் குழந்தைகளில் மூன்றில் இருவர் வயிற்றுப் போக்கு மற்றும் சுவாச நோய் ஆகியவற்றால்தான் இறக்கிறார்கள். அதற்கு காரணம் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் பெருமளவில் வாய் மூலமே உடலுக்குள் நுழைவதே. ஒரு கிராம் மனித மலத்தில் ஒரு கோடி வைரஸ்களும், பத்து இலட்சம் பாக்டீரியாக்களும் உள்ளன என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பெரும்பாலான நோய்கள்  பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. இதற்காக தான் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  நாம் இப்போது எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும் என்பது பற்றி இங்கு காண்போம்.

 

காலையில் எழுந்த உடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.

 

முக்கியமாக மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.

 

எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

 

வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.

 

அதிக ரசாயனம் கலந்த சோப்புகள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

 

குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

 

கைகளை அவசர அவசரமாக கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். குறிப்பாக நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, 60 விழுக்காடு நோய்களை தடுக்கலாம்.இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, 60 விழுக்காடு நோய்களை தடுக்கலாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!