Home  |  அறுசுவை

கொழு மொழு குலாப் ஜாமூன் !!

கொழு மொழு குலாப் ஜாமூன் !!

குலாப் ஜாமூன் செய்து கொடுத்து அசத்தி குழந்தைகளை தான் பக்கம் இழுக்க நினைக்கும் பெண்களுக்கு இதோ எப்படி செய்வது குலாப் ஜாமூன் சொல்கிறோம் பாருங்க -

தேவையான பொருட்கள்

குலாப் ஜாமூன் பவுடர் - 1 பாக்கெட்
அஸ்கா - 3 கப்

நெய் - கால் கிலோ
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

முதலில் குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்து உங்களுக்குத் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள். உருண்டைகள் பிடிக்கும் போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் உருண்டையை போட்டு கையினால் உருட்டினால், உருண்டை விரிசல் இல்லாமல் மொழு மொழு என்று சூப்பராக வரும்.


பிறகு வாணலியில் ஒரு பாத்திரத்தில் அஸ்காவை கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.


மற்றொரு வாணலியில் கால் கிலோ நெய் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு உருண்டைகள் அனைத்துப் பக்கமும் வேகும் வகையில் உருட்டிக் கொண்டே இருங்கள்.


அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். அப்போதுதான் மாவு நன்கு வேகும். தீ அதிகமாக இருந்தால் உருண்டை விரைவாக கருத்துவிடும். மாவும் உள்ளே வேகாமால் இருக்கும்.


உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்கவும்.
சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும்.


விரைவாக குலோப் ஜாமூன் தயாராக வேண்டும் என்றால், பாகு நன்கு சூடாக இருக்கும் போதே, வாணலியில் குலாப் ஜாமூனை பொரித்து எடுத்து போட்டுவிட்டால், பாகு ஆறியதுமே ஜாமூன் தயாராகிவிடும். அவ்வளவு தாங்க குலாப் ஜாமூன் ரெடி சாப்பிடுங்க குழந்தைகளுக்கும் கொடுங்க !

Gulab jamun making method
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!