Home  |  ஆரோக்கியம்

தினம் தினம் ஒரு கீரை !!

பார்வைக் கோளாறு, எதிர்ப்பு சக்தி இன்மை, வயிற்று புண் என மருத்துவரிடம் போனால், மருத்துவர்கள் உணவில் முதலில் பரிந்துரைப்பது என்னவோ கீரைகளை தான். 


ஆனால் நாமது குழந்தைகளோ, கீரை சமையல்களை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். இதற்கு காரணம், கீரையை வெறும் மசியலாவும், கடைசலாகவுமே கொடுத்தா, எந்தக் குழந்தைங்களுக்குத்தான் பிடிக்கும்?


எந்த ஒரு உணவு வகையாக இருந்தாலும், கொடுக்கிற விதத்துல கொடுத்தா எப்பேர்ப்பட்ட உணவும், யாருக்கும் பிடிக்கும் அல்லவா. ஒரு மாறுதலுக்கு கீரையிலேயே ஆம்லெட், பணியாரம், கிரிஸ்பீஸ்னு செஞ்சு கொடுத்துப் பாருங்க... 


அப்புறம் கீரை இல்லாம ஒருநாள்கூட சாப்பிட மாட்டாங்க குழந்தைங்க.. 


தினம் ஒரு கீரையை விதவிதமாக சமைத்து உங்க உணவில் சேர்த்து பாருங்க... உங்களுக்கு எந்தவிதமான நோயும் வராது.


அடுத்தததாக கீரைகளை சமைக்கும் போது என்னென்ன செய்யணும், செய்யக் கூடாது என்பதை பார்ப்போமா.


கீரை மசியலுடன் சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால், மசியல் நன்கு குழைவாக இருக்கும்.


கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். 


அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .


கீரையை வேக வைக்கும் போது மூடக்கூடாது. திறந்தபடி இருந்தால்தான் அதில் இருக்கும் அமிலச் சத்துகள் வெளியேறும். 


கீரையை வேக வைக்கும் போது சிறிது உப்பைச் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.


வெந்தயக்கீரையில் சிறிது சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத் தன்மை நீங்கிவிடும். 


எந்தக் கீரையாக இருந்தாலும் அதோடு மூன்று துணுக்கு கறிவேப்பிலையை உருவிப் போட்டு சேர்த்து வேக வைக்கவும். பிறகு, வழக்கம் போல கடையவும். கீரை மசியல் மணமாக, சுவையாக இருக்கும். 

அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து, பொடி செய்து காலை, மாலை அரை டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடிக்கவும். வயிறு, மார்பு வலிகள் குணமாகும்.


வெந்தயக்கீரை அதிக அளவில் கிடைக்கிறதா? அதை வாங்கி, கழுவி, நிழலில் உலர வைக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். 


கொத்தமல்லியை நறுக்கி, பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து, பிறகு அலசி சுத்தம் செய்ய வேண்டும். புதினாவை அலசி சுத்தம் செய்த பிறகுதான் நறுக்க வேண்டும்.


பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்பு பெருக்கும். இதையே துவரம் பருப்பு, மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்கும். 


பசலைக்கீரையில் பருப்புச் சேர்த்து வேக வைத்து, மிளகாய், சீரகம் தாளித்து சாதத்தில் பிசைந்து உண்டு வந்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். நல்ல பசி எடுக்கும். 


முருங்கைக்கீரையை விழுதாக அரைத்து, தயிரில் கரைத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் காணாமல் போய்விடும்.


முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் நீர்ச்சுருக்குப் பிரச்னை தீரும். 


முருங்கைக்கீரையுடன் துவரம் பருப்புச் சேர்த்து சமைத்து, பகல் உணவுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். 


தூதுவளைக் கீரையை குழம்பாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சளி, தும்மல் தொல்லைகள் நீங்கும். 


வாதநாராயணக் கீரையை சமைத்து சாப்பிட்டால் வாத நோய்கள் நெருங்காது.


அகத்திக்கீரை சூப் கல்லீரல், நீரிழிவு பிரச்னைகளுக்கு அரு மருந்து. அகத்திக்கீரையை அரைத்துத் தடவினால் உடலில் ஏற்பட்ட காயங்களும் ஆறும். 


குறிப்பு : கீரை வகைகள், தயிர், இஞ்சி, முள்ளங்கி, நுங்கு, இளநீர், எள், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை இரவில் சாப்பிடக் கூடாது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!