Home  |  அறுசுவை

கொள்ளு சட்னி அருமையாக செய்வது எப்படி ?

கொள்ளு சட்னி அருமையாக செய்வது எப்படி ?
தேவையானவை :


கொள்ளு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
தக்காளி - 1
புளி - சிறிது
வர மிளகாய் - 2
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்


மிளகு - கால் டேபிள் ஸ்பூன்
கடுகு - கால் டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 8 பல்லு
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு ,உளுந்து - அரை டேபிள் ஸ்பூன் 
பெருங்காயம் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
 

1.கொள்ளை தண்ணீரில்  ஊற வைத்து களைந்து கழுவி, நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும் .

2.வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .

3.எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

4.பின்னர் காய்ந்த  மிளகாய், தக்காளி, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

5.அதனுடன் சீரகம், மிளகு, புளி சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக வதக்கிய பிறகு கொள்ளை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

6.தனியே வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை அரைத்த சட்டினியுடன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சுவையான கொள்ளு சட்னி ரெடி.

சிறு குறிப்பு - கொள்ளில் சிறு சிறு கற்கள் இருக்கும். அதனால் நன்றாக களைந்து வேக வைக்கவும்.


உடல் எடையை குறைக்கவும், சளித் தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் பெறவும் கொள்ளு மிகவும் பயனளிக்கும்.கொள்ளு சூடு என்பதால் நல்லெண்ணெய் கொண்டு தாளிக்களாம்.

 

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!