Home  |  திரை உலகம்

கவுண்டமணியின் கவுண்டவுன் ஸ்டார்ட் !

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் படம் 49ஓ. 

 

இந்த படத்தின் படபிடிப்பு சென்னை புறநகரை தாண்டிய ஒரு கிராமத்தில் துவங்கியது. ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படத்தை கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் டைரக்ட் செய்கிறார். கவுண்டமணி இதில் விவசாயியாக நடிக்கிறார். அவருடன் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், திருமுருகன், சோமசுந்தரம் நடிக்கிறார்கள். கவுண்டருக்கு பொருத்தமான ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

 

இந்த படத்திற்கு 49ஓ என்று பெயர் வைத்துள்ளதால், பாலிடிக்ஸ் படம் என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது பாலிடிக்ஸ் படம் இல்லையாம். இப்போதுள்ள விவசாயிகளின் பிரச்னைகளையும், கஷ்டங்களையும் காமெடியாக சொல்லும் படம்.

 

படத்தில் நடிப்பது பற்றி கவுண்டமணியிடம் கேட்டபோது, "ஏங்கண்ணு டவுனுக்குள்ள படம்புடிச்சா மைக்க தூக்கிட்டு வந்துடுறீங்கன்னு இம்புட்டு தூரம் ஒதுங்கி வந்தா துரத்திக்கிட்டு வந்திட்டீங்களே. பேட்டி கொடுக்கிறதுக்கு நானு காந்தியா, காமராசரா என்று கவுண்டரு ஹீரோ ரீ-என்ட்ரி கொடுக்குறாரு. கங்கிராட்ஸ் பண்ணிட்டு போங்க கண்ணு" என்றார். கவுண்டரின் குசும்பும், குறும்பும் இன்னும் மாறவே இல்லை.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்