Home  |  தொழில் நுட்பம்

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்..!!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்..!!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்... ஆம் என்றால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான் அனுப்ப வேண்டும் என்றில்லை.

உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம் தெரியுமா? அதற்கான வசதியை கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input ) எனும் புதிய அப்ளிகேஷன் மூலம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 82 உலக மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போனில் என்னதான் சூப்பர் கீபோர்ட்கள் வந்துவிட்டாலும் கூட, பலருக்கு டைப் செய்வது என்றால் எட்டிக்காய் சங்கதிதான். இன்னும் பலருக்கு என்ன இருந்தாலும் கையில் எழுதி அனுப்புவது போல வருமா? என்ற உணர்வும் இருக்கலாம்.

இந்த இரண்டு குறைகளையும் தீர்க்கும் வகையில் கூகுள், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கைவிரலிலேயே எழுதி அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கையால் எழுதப்படும் எழுத்துக்கள் ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னேஷன் முறையில் புரிந்து கொள்வதன் அடிப்படையில் இந்த வசதி செயல்படுகிறது.

கூகுள் ஹேன்ட்ரைட்டிங் இன்புட் அப்ளிகேஷன் மூலம், டச் ஸ்கிரீனில் கைவிரலால் பக்குவமாக எழுதலாம். அல்லது ஸ்டைலீசாகும் எழுதலாம். உங்கள் கையெழுத்து கிறுக்கலாக இருக்கும் என்ற கவலையே வேண்டாம், இதில் எழுதிப்பாருங்கள் எந்த வகையான எழுத்துக்களையும் புரிந்து கொள்வோம் என கூகுள் சொல்கிறது. எழுத்துக்கள் மட்டும் அல்ல, இமேஜிகள் என சொல்லப்படும் ஐகான்களையும் இதில் வரைந்து காட்டலாம்.

ஒரு முறை இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துவிட்டால் இணைய இணைய்ப்பு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற மெசேஜிங் சேவைகளிலும் இதை பயன்படுத்தலாம். ஏற்கனவே கூகுள் மொழிபெயர்ப்பு வசதியில் இது போன்ற அம்சம் இருக்கிறது. அதை ஆய்வு மூலம் விரிவாக்குவதற்காக இந்த வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
 
அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!