Home  |  திரை உலகம்

கோலி சோடா ( Goli Soda )

கோலி சோடா ( Goli Soda )

Movie Name: Goli Soda கோலி சோடா
Year: 2014
Movie Director: VIJAY MILTON
Movie Producer: THIRUPATHI BROTHERS
Music By: S.N.Arunagiri

பெற்றோரில்லா புள்ளி, சேட்டு, சித்தப்பு மற்றும் முருகேஷுக்கு ஆச்சிதான் அன்புக்கரம் நீட்டும் தாய். வாழ்வில் முன்னேற சிற்றுண்டி கடை வைக்க ஆசைப்படுகிறார்கள் நால்வரும். மார்க்கெட்டை தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் நாயுடுவிடம் அவர்களுக்காக பேசுகிறார் ஆச்சி. தனது குடோனையே உணவகமாக மாற்ற உதவி செய்கிறார் நாயுடு. வியாபாரம் சூடு பிடிக்கும் சமயம் நாயுடுவின் தம்பி கடையில் செய்யும் தகாத செயலால் அவனிடம் மோதி விரோதத்தை பெறுகிறார்கள். கிஷோர், அன்பு, ‘பக்கடா’ பாண்டி, முருகேஷ் என ஹீரோ சப்ஜக்ட்.

முதல் படம் தந்த அனுபவம் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டதால் கேமரா பயம் இல்லை. நால்வருக்கும் சமமான பங்கை தந்திருக்கும் இயக்குனரை பாராட்ட வேண்டும். குறிப்பாக இரண்டாம் பாதி தொடங்கிய முதல் நொடியில் இருந்து விஸ்வரூபம் எடுக்கிறது. சாந்தினி. அன்பு, அடக்கம், அழகு. த்ரீ இன் ஒன். ‘ஒரு செடி, ஒரு ப்ளவர்’ சீதா காமடி, கண்ணீர் இரண்டிலும் கொடிகட்டி பறக்கும் அருமையான அறிமுகம். குணச்சித்திர நடிப்பில் ‘ஆச்சி’ சுஜாதாவிற்கு மைல்கல். அன்பே சிவமாக ‘கிஷோர்’ அப்பா சிவகுமார் நடிப்பும் நன்று.

சில காட்சிகளே வந்தாலும் இமான் அண்ணாச்சி கைத்தட்டல். வில்லன்களாக மதுசூதனன் மற்றும் விஜய் முருகன். பாண்டிராஜின் வசனங்கள் கோலி சோடாவை வலுவாக தாங்கி நிற்கும் பாட்டில். படத்தின் இன்னொரு பலம் ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர். 100% அசலான சண்டையை கண்முன் நிறுத்தி இருக்கிறார். இசை எஸ்.என்.அருண்கிரி கானா பாலாவை வைத்து படம் ஆங்காங்கே நம்மை கைத்தட்ட வைத்திருக்கிறார். பின்னணி இசையை சேர்த்த சீலின் பாராட்ட வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல திறமையான ஒளிப்பதிவாளர்களை தேடினால் அதில் கண்டிப்பாக விஜய் மில்டன் இருப்பார்.

அதேபோல் தனக்கான ஒரு அடையாளத்தை சினிமாவில் நிலைநாட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த இவருக்கு இந்த கோலி சோடா நிச்சயம் தாகத்தை தணித்திருக்கும். ஆபாசம் என்று எதுவும் இல்லாமல், இரட்டை அர்த்தம் என்று முகம் சுழிக்க வைக்காமல் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படியான ஒரு நல்ல படத்தை தந்திருக்கிறார்.  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்