Home  |  ஆன்மிகம்

ஈசன் போற்றிய ஸ்வாதீன வல்லபா !!

ஈசன் போற்றிய  ஸ்வாதீன வல்லபா !!

அகிலம் எல்லாம் காப்பாற்றும் அன்னை பார்வதி தேவி ஜகத்தை ஆளும் ஜகதீசனாம் பரமேசுவரனைத் தன் கணவனாக அடைய வேண்டும் என்பதற்காக மிகவும் கடும் தவம் புரிந்தாள். தேவர்களும், முனிவர்களும் அவளுடைய தவத்தின் சிறப்பைக் கண்டு வியந்தனர்.


ஆதி மூலன் பரமேசுவரனும் தேவியின் தவத்தைப் சோதித்து பார்க்க வேண்டும் என தீர்மானித்து தானே தவவேஷம் பூண்டு ஒரு பிரம்மசாரியாக அவள் முன் வந்தார். பார்வதி தேவியிடம் “நீ எதற்காக இந்தக் கடுந்தவம் இயற்றுகிறாய்?” என்று கேட்டார்.


அதற்கு அன்னையின் தோழிமார்கள் அவரிடம் “பரமேசுவரனைக் கணவனாக அடைவதற்காகவே இந்தக் கடும் தவம்” என்று கூறினார். ஆனால் அதைக் கேட்டு அவர் எள்ளி நகையாடினார் ஈசன் .


பிறகு பார்வதி தேவியைப் பார்த்து “மலைமகளே ஒரு மணப்பெண் தன் கணவனிடம் விரும்பும் முக்கியமான மூன்று விஷயங்களில் ஏதாவது ஒன்றாவது பரமசிவனிடத்தில் இருக்கிறதா, என்று நீ யோசித்துப் பார்த்தாயா? முதலில் கன்னிகைகள் தம் கணவன்மாரிடம் நல்ல அழகை எதிர்பார்க்கின்றனர்.

 

ஆனால் பரமசிவனோ தனது நெற்றிக் கண்ணோடு மூன்று கண்களைத் திறந்து பயங்கர ரூபியாக விளங்குகிறார். இரண்டாவது, கணவன் நல்ல வம்சத்தைச் சேர்ந்தவனா, அவனது பெற்றோர் எத்தகையவர் என்று பார்ப்பார்கள். சிவபெருமானோ யாருக்குப் பிறர்தார் என்று அறிய முடியாமல், தந்தை தாய் அற்றவராக இருக்கிறார்,


மேலும் மூன்றாவதாக, கட்டின மனைவியைக் கண் கலங்காமல் வைக்க ஏதோ சொத்து, சுகம் உள்ளவரா என்று பார்த்தால், சிவபெருமான் திக்குகளையே ஆடையாக உடையவராக திகம்பரராக சுடுகாட்டில் திரிபவராக இருக்கிறார். இத்தகைய சிவனையா நீ கணவனாக அடைய விரும்புகிறாய்?” என அவளிடம் கேட்டார்.

 

அகிலம் காக்கும் பார்வதி தேவியோ சிவ நிந்தையைக் கேட்டுக் கோபம் கொண்டவளாக, ஆனாலும் தனது சினத்தை அடக்கிக் கொண்டு, சிவபெருமானுடைய பெருமைகளை எல்லாம் வெகு அழகாக அந்த பிரம்மசாரிக்கு விளக்கிக் கூறினாள் -

 

பரமசிவன் ஒன்றும் இல்லாத ஏழைபோல் காட்சி அளிக்கலாம். ஆனால் அவர்தான் எல்லாச் செல்வத்திற்கும் காரணமாக விளங்குபவர். அவர் சுடுகாட்டில் வாழ்பவராக இருக்கலாம்.


ஆனால் அவர்தான் மூன்று உலகங்களுக்கும் அதிபதி. நெற்றிக் கண்ணோடு பார்வைக்கு பயங்கரமாக அவர் தோற்றம் இருக்கலாம். ஆனால் அவர்தான் மங்கள ஸ்வரூபி. பினாகம் தரித்த பரமேசுவரருடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் யார் என்றால் அவருடைய உண்மையான பக்தர்கள் தவிர வேறு எவரும் இல்லை மேலும் ஜெகத்தினை காத்திட்ட ஜகதீசனே அவர்தான் அவருக்கு நிகர் வேறில்லை என அழகாகப் பதில் கூறினாள்.


பார்வதி தேவியின் தவத்தின் பெருமையை கண்ணுற்ற சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தேவி உன்னுடைய தவத்தின் வலிமையால் - நீ என்னை வென்று விட்டாய் நான் உனது தாஸன் ஆகிவிட்டேன் -


என கூறி பின்னர் தேவியைத் திருமணம் செய்து கொண்டார். தனது தவத்தாலே இறைவனையே தனது வசம் ஆக்கிக் கொண்டதால் தேவியும் ஸ்வாதீன வல்லபா என பெயரும் பெற்றாள்.

  15 May 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!