Home  |  ஆன்மிகம்

திருமுருகன் - திருவீதி உலா !!

திருமுருகன் - திருவீதி உலா !!


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்சவம் நேற்று நடைபெற்றது.


நேற்று காலை உற்சவர் சன்னதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தாயார் தெய்வானை , சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை , சீவிலிநாயகர் மற்றும் அஸ்தர தேவர் இனிதே எழுந்தருளினர்.


கடந்த மார்ச் மாதம் 24 -ம் தேதி முதற்கொண்டே நடைபெற்றுவந்த புண்ணிய யாகசாலை பூஜைகள் நேற்று காலை நல்ல விதமாக பூர்த்தி செய்யப்பட்டு புனிதநீர் கொண்டு வரப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பாக நடந்தது.

 


மேலும் உச்சிகால பூஜைக்குப் பிறகு மூஞ்சுறு வாகனத்தில் அருள்மிகு விநாயகர் பகவான் பல்லக்கில் அஸ்தர தேவர், தங்க மயில் வாகனத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி , தாயார் தெய்வானை ஆகியோர் சரவணப்பொய்கையில் எழுந்தருளி அருள் பாலித்தனர்.

 

பூஜைகள் முடிந்து சிவாச்சார்யார்களால் அஸ்தர தேவர் சவரணப் பொய்கை தண்ணீருக்குள் கொண்டுசென்று, பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீர்த்த உற்சவம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி கோடான கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

  09 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!