Home  |  கல்விச்சோலை

பொது தமிழ் பகுதி 3

1101. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார்?

விடை : கபிலர்


1102. இஸ்லாம் இலக்கியத்தில் பெரிய நூலை இயற்றியவர் யார்?

விடை : உமறுப்புலவர்


1103. நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது?

விடை : மூன்றாம் நந்திவர்மன்


1104. கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது?

விடை : அழகம்மை ஆசிரிய விருத்தம்


1105. கூத்தராற்றுப்படை எனப்படுவது?

விடை : மலைப்படுகடாம்


1106. ‘ஆளுடைய பிள்ளை’ என அழைக்கப்படுபவர்?

விடை : திருஞானசம்பந்தர்


1107. சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது?

விடை : பரிபாடல்


1108. கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார்?

விடை : குகன்


1109. நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார்?

விடை : ஆண்டாள்


1110. “குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது” என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது?

விடை : கல்வி


1111. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது?

விடை : பரணி


1112. கற்க கசடறக் கற்பவை கற்றபின் இதில் அமைந்துள்ள மோனை?

விடை : முற்றுமோனை


1113. அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல்

விடை : அகநானூறு (அல்லது) நெடுந்தொகை


1114. பிரித்தெழுதுக: “தீந்தேன்”

விடை : தீம்+தேன்


1115. வேர்சொல்லை அறிந்து எழுதுக: “கண்டேன்”

விடை : காண்


1116. தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது?

விடை : ஆதிச்சநல்லூர்


1117. முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம்?

விடை : செய்தி வாக்கியம்


1118. “தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார்?

விடை : திரு.வி.க


1119. வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது

விடை : கொள்ளவை நிலை


1120. கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம்

விடை : கூறல்


1121. “சுலோசனா சதி” என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்?

விடை : சங்கரதாஸ் சுவாமிகள்


1122. இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் எது?

விடை : கபாடபுரம்


1123. தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள்

விடை : அகநானூறு, ஐங்குறுநூறு


1124. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள்

விடை : பிரிதல்


1125. தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார்?

விடை : செவ்வி சப்பல்


1126. செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது

விடை : நிரல் நிறைப் பொருள்கோள்


1127. செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது?

விடை : உயர்வு நவிற்சி அணி


1128. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?

விடை : பூரிக்கோ


1129. அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம்?

விடை : நாயகப்பத்தி


1130. மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது

விடை : மணிப்பிரவாள நடை


1131. சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர்?

விடை : திருநெல்வேலி


1132. அத்துவானம் என்பது

விடை : ஆள் இல்லாத பகுதி1133. வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது

விடை : தனிவாக்கியம்


1134. பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன்

விடை : கரிகாலன்


1135. மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது

விடை : மூதில் முல்லை


1136. தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார்?

விடை : பனம்பாரனர்


1137. அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?

விடை : நாற்கவிராசநம்பி


1138. மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது

விடை : மருட்கை


1139. வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம்?

விடை : குறுந்தொகை


1140. திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை

விடை : களவியல்


1141. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது?

விடை : பொருளியல்


1142. ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை

விடை : அகவற்பா


1143. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?

விடை : சேக்கிழார்


1144. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது?

விடை : சோற்றுக்கற்றாழை


1145. மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள்

விடை : பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்


1146. தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம்

விடை : தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம்


1147. ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார்?

விடை : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி


1148. யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது?

விடை : அகநானூறு


1149. எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்

விடை : மயில்தோகை மற்றும் அகில்


1150. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்

விடை : பேரறிஞர் அண்ணா


1151. அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர்

விடை : சுஜாதா


1152. தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார்?

விடை : ஜி.யு.போப்


1153. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

விடை : ஜி.யு.போப்


1154. வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை : இத்தாலி


1155. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை : வ.வே.சு. ஐயர்


1156. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

விடை : பம்மல் சம்பந்த முதலியார்


1157. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது?

விடை : கோண்


1158. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?

விடை : இராமாமிர்தம் அம்மையார்


1159. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது?

விடை : தொல்காப்பியம்


1160. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர்?

விடை : புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்


1161. சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார்?

விடை : பம்மல் சம்பந்த முதலியார்


1162. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது?

விடை : வடலூர்


1163. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது?

விடை : அபிமன்யு சுந்தரி


1164. பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல்

விடை : திருவாசகம்


1165. பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்?

விடை : சுதேசமித்ரன்


1166. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்?

விடை : நாமக்கல் கவிஞர்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!