Home  |  கல்விச்சோலை

பொது தமிழ் பகுதி 2

1059. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது?

விடை : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்


1060. மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம்?

விடை : புத்த சமயம்


1061. உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் எது?

விடை : யசோதர காப்பியம்

1062. பேச்சுவழக்கில் 'இன்னும் வரவில்லையே' என்னும் வாக்கியம் எதைக் குறிக்கும்?

விடை : உணர்ச்சி


1063. மருதத் திணைக்குரிய தொழில் எது?

விடை : நெல்லரித்தல்


1064. 'காந்தள் மலர்' எத்திணைக்குரியது?

விடை : குறிஞ்சி


1065. 'காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன?

விடை : கண்ட


1066. தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது?

விடை : ஒன்பது


1067. 'மான்மியம்' என்பதன் பொருள் என்ன?

விடை : தலபுராணம்


1068. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்று பாடியவர் யார்?

விடை : அப்பர்


1069. அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது?

விடை : 13 அடி முதல் 31 அடி வரை


1070. 'ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன?

விடை : படகு


1071. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?

விடை : குமரகுருபரர்


1072. வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார்?

விடை : காளமேகப் புலவர்


1073. நாட்டுப்புறப் பாடலில் வரும் மீனவர்களின் அரிச்சுவடி எது?

விடை : மீன்பிடி வலை


1074. 'வியா இலங்குவரை உந்திய தோள்களை' இப்பாடல் இடம் பெறும் நூல் எது?

விடை : தேவாரம்


1075. பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது?

விடை : சக்கரம்


1076. 'வள்ளுவனைப் பெற்றதால் புகழ் வையகமே' எனப் பாடியவர் யார்?

விடை : பாரதிதாசன்


1077. 'ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?' என உரைப்பது யார்?

விடை : ஆண்டாள்


1078. சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார்?

விடை : தசரதன்


1079. பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது?

விடை : காவிரிபூம்பட்டினம்


1080. பணை என்னும் சொல்லின் பொருள் யாது?

விடை : மூங்கில்


1081. திவ்வியப்பிரபந்தத்துக்கு உரை வழங்கியவர் யார்?

விடை : பெரியவாச்சான் பிள்ளை


1082. 'கிறித்துவக் கம்பர்' - யார்?

விடை : எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை


1083. கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது?

விடை : யாப்பு வகையால்


1084. 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது?

விடை : திருக்குறள்


1085. மணநூல் என சிறப்பிக்கப் படுவது?

விடை : சீவகசிந்தாமணி


1086. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் எது?

விடை : தக்கயாகப் பரணி


1087. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

விடை : பாண்டியன் மாறன் வழுதி


1088. யாருடைய கல்வி இனிமை பயக்கும்?

விடை : அவைக்கு அஞ்சாதவனின்


1089. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவன்

விடை : யூதாஸ்


1090. ஆளுடைய அரச என அழைக்கப்படுபவர்

விடை : அப்பர்


1091. 'எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே' என்ற பாடல் வரிகள் மூலம் ஒளவையார் உணர்த்துவது?

விடை : கற்றார் செருக்குக் கொள்ளக் கூடாது


1092. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?

விடை : திருமூலர்


1093. திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை?

விடை : சுக்கு, மிளகு, திப்பிலி


1094. ‘மோ’ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன?

விடை : முகர்தல்


1095. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

விடை : திருத்தக்கதேவர்


1096. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது?

விடை : பிள்ளைத் தமிழ்


1097. ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

விடை : சேக்கிழார்


1098. அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள்

விடை : பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்


1099. ‘ஆற்றுணா’ என்பது

விடை : வழிநடை உணவு


1100. ‘செலவாங்குவித்தல்’ என்றால் என்ன?

விடை : பொருள்வயின் பிரிவைத் தடுப்பது

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!