Home  |  கல்விச்சோலை

பொது அறிவியல் - பகுதி 5

926. மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது?
விடை : நடுச்செவி எலும்பு

927. சிறுநீரில் அதிகம் காணப்படும் உப்பு எது?
விடை : யூரியா

928. உடலில் ஸ்டார்ச் எதுவாக மாற்றம் அடைகிறது?
விடை : சர்க்கரை

929. இறந்த பிறகும் மனிதனின் உடலில் வளரும் பகுதிகள் எவை?
விடை : நகம், உரோமம்

930. ரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை பிரிப்பது எது?
விடை : நுரையீரல்

931. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்?
விடை : 90 நாட்களுக்கு ஒருமுறை

932. இன்சுலின் எங்கு சுரக்கிறது?
விடை : கணையத்தில்

933. பிட்டியூட்டரி சுரப்பி எங்கு உள்ளது?
விடை : மூளையின் அடிப்பகுதியில்

934. ஆரோக்கிய மனிதனின் ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கும்?
விடை : 120/80

935. கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொறிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
விடை : 22 நாட்கள்

936. குட்டி போட்டு இனத்தைப் பெருக்கும் மீன் இனம் எது?
விடை : திமிங்கலம்

937. மூளையே இல்லாத கடல்வாழ் உயிரினம் எது?
விடை : நட்சத்திர மீன்

938. எந்த வைட்டமின் குறைவால் பெரி பெரி நோய் ஏற்படுகிறது?
விடை : வைட்டமின் B1

939. விரைவாக குஞ்சுபொறிக்க உதவும் சாதனம் எது?
விடை : இன்குபேட்டர்

940. உடலமைப்பை பற்றிய அறிவியல் பிரிவின் பெயர் என்ன?
விடை : அனடாமி (Anatomy)

941. அறுவை சிகிச்சை கருவிகளை தூய்மையாக்கும் முறையை கண்டறிந்தவர் யார்?
விடை : ஜோசப் லிஸ்டர்

942. அதிகமான ஒளியைக் கண்டு தோன்றும் பயத்தின் பெயர் என்ன?
விடை : Photophobia

943. ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 100 முதல் 120 நாட்கள் வரை

944. மனித உடலில் எத்தனை லிட்டர் ரத்தம் இருக்கும்?
விடை : 5 முதல் 6 லிட்டர் வரை

945. எத்தனை வயதுக்குப் பின்னர் மூளையின் வளர்ச்சி நின்று விடுகிறது?
விடை : 15 வயதுக்கு மேல்

946. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்ட உயிரி எது?
விடை : மண்புழு

947. தோல் உரிக்கும் உயிரினங்கள் யாவை?
விடை : பாம்பு, கரப்பான் பூச்சி, பட்டுப்பூச்சி

948. இறகு இல்லாத பறவை எது?
விடை : கிவி பறவை

949. யானையின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
விடை : 47 வருடங்கள்

950. தன் தலையை முழுவதும் பின்புறமாக திருப்பக்கூடிய பறவை எது?
விடை : ஆந்தை

951. பசுவின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன?
விடை : நான்கு பகுதிகள்

952. பின்புறமாக படுத்து உறங்கும் உயிரினம் எது?
விடை : மனிதன்

953. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன் எது?
விடை : ஆல்புமின்

954. அதிக வாழ்நாள் கொண்ட உயிரினம் எது?
விடை : நீலத்திமிங்கலம் (500 ஆண்டுகள்)

955. போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் யார்?
விடை : ஜோனஸ் இ.சால்க்

956. பச்சையம் இல்லாத தாவரம் எது?
விடை : காளான்

957. பாலை தயிராக்குவது எது?
விடை : ஈஸ்டுகள்

958. எலும்புகளைப் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?
விடை : ஓஸ்டியோலாஜி (Osteology)

959. கரப்பான் பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிமக்கண்ணின் பெயர் என்ன?
விடை : ஓமட்டியம்

960. உமிழ்நீரில் அடங்கியுள்ள ஆண்டிபாக்டீரியல் காரணி எது?
விடை : லைசோம்

961. கல்லீரல் (Spleen) வீங்கி பெரிதாகும் நோய் எது?
விடை : ஸ்பிலினோமெக்கலி

962. எய்ட்ஸ் நோயை கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன?
விடை : ELISA Test

963. சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் ஜோடியாக காணப்படும் சுரப்பி எது?
விடை : அட்ரினல் சுரப்பி

964. நெஃப்ரான் எனப்படும் வடிகட்டிகள் உடலின் எந்த பகுதியில் காணப்படுகின்றன?
விடை : இரு சிறுநீரகங்களில்

965. இரு வேறு பிரிவு ரத்தத்தை சேர்த்தால் என்னவாகும்?
விடை : ரத்தம் கட்டிக்கொள்ளும்

966. முதல் சோதனை குழாய் குழந்தை பெற்ற பெண்மணி யார்?
விடை : லெஸ்லி பிரவுன்

967. சீனர்களின் ஊசி மருத்துவ முறையின் பெயர் என்ன?
விடை : அக்குபஞ்சர்

968. இந்தியாவில் மருத்துவத்துக்காக வழங்கப்படும் விருது எது?
விடை : தன்வந்திரி

969. கடல் பற்றிய ஆராய்ச்சி படிப்பின் பெயர் என்ன?
விடை : ஓசனோகிராபி (Oceanography)

970. ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் தோன்றும் நோய் எது?
விடை : லூக்கேமியா

971. மையோபியா என்பது என்ன?
விடை : கிட்டப்பார்வை குறைபாடு

972. சாதாரண வீட்டு ஈக்களால் பரவும் நோய்கள் எவை?
விடை : டைபாய்டு, சீதபேதி

973. நமது உடலில் எத்தனை துளைகள் உள்ளன?
விடை : ஒன்பது துளைகள்

974. Oology என்பது எதைப்பற்றிய துறை?
விடை : பறவைகளின் முட்டைகளைப் பற்றிய அறிவியல்

975. சூரியனுக்கு அருகில் உள்ள கோள் எது?
விடை : புதன்

976. பூமியை விட சூரியன் எத்தனை மடங்கு பெரியது?
விடை : 12 ஆயிரம் மடங்கு

977. பூமி சூரியனுக்கு மிக அருகில் எந்த மாதத்தில் வரும்?
விடை : டிசம்பர் மாதம்

978. நிலவில் முதல்முதலில் காலடி வைத்தவர் யார்?
விடை : நீல் ஆம்ஸ்ட்ராங்

979. விண்வெளியில் முதலில் பறந்தவர் யார்?
விடை : யூரி ககாரின்

980. இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது?
விடை : ஆரியபட்டா

981. நிலவுக்கு மனிதனை ஏந்திச்சென்ற விண்கலம் எது?
விடை : அப்போலோ-II

982. விண்வெளியில் முதலில் நடந்தவர் யார்?
விடை : அலெக்ஸி லியோல்

983. விண்வெளிக்குச் சென்ற 135-வது வீரர் யார்?
விடை : இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா

984. ரஷ்ய விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன?
விடை : மிர் விண்வெளி நிலையம்

985. விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி யார்?
விடை : ஸ்வெட்லானா சவிட்ஸ்காயா (ஜூலை 25, 1984)

986. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?
விடை : பிரிதிவி

987. உலக கொசு ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
விடை : ஆகஸ்ட் 20

988. ஆகாய விமானங்களில் ஒளிச்செறிவைக் கட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடிகளாக பயன்படுவது எது?
விடை : போலராய்டு

989. வானம் நீல நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன?
விடை : ஒளிச்சிதறல் (Scattering of Light)

990. D.D.T. என்பது என்ன?
விடை : ஒரு பூச்சிக்கொல்லி (Insecticide)

991. கிளெப்டோமேனியா என்றால் என்ன?
விடை : பொருட்களை திருடும் ஒரு வகை நோய்

992. ஊறுகாய் தயாரிப்பில் பயன்படும் அறிவியல் கொள்கை எது?
விடை : பிளாஸ்மாலைசிஸ்

993. கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிபத்திரங்களையும் கண்டறிய உதவும் கதிர்கள் எவை?
விடை : அல்ட்ரா வயலட் கதிர்கள்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!