Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 9

281. தமிழ்நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் எது?

விடை : தொட்டபட்டா (நீலகிரி மலை)

282. தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் எது?

விடை : ஆனைமுடி (ஆனைமலை)

283. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

விடை : நாமக்கல் மாவட்டம்

284. தமிழ்நாட்டில் "ஆர்ட்டிசன்" ஊற்றுகள் எங்குள்ளன?

விடை : சோழ மண்டல கடற்கரை சமவெளி

285. காவிரி நதி நீர் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

விடை : 1997

286. "இந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அருவி?

விடை : ஒக்கேனக்கல்

287. காவிரி நதியின் நீளம் எவ்வளவு?

விடை : 760 கி.மீ.

288. தமிழகத்தில் நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்கள் எவை?

விடை : மதுரை, திருச்சி, ரங்கம், நெல்லை, வேலூர்

289. குருசடை தீவு எங்கு அமைந்துள்ளது?

விடை : மன்னார் வளைகுடாவில் மண்டபத்துக்கு அருகே. இது "சுற்றுச்சூழல் சொர்க்கம்" (Ecological Paradise) என்று அழைக்கப் படுகிறது.

290. ஆதாம் பாலம் எங்கு உள்ளது?

விடை : ராமேசுவரத்துக்கும் இலங்கை மன்னார் தீவுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளே ஆதாம் பாலம் என்றும், ராமர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 30 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம் மன்னார் வளைகுடாவையும், பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது.

291. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது?

விடை : சென்னிமலை

292. தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

விடை : 1980

293. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதிகள் யார்?

விடை : நீதிபதி முத்துசாமி அய்யர், நீதிபதி கிருஷ்ணசாமி அய்யர்

294. "ஸ்லம் டாக் மில்லினர்" படத்துக்காக கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் யார்?

விடை : ஏ.ஆர்.ரகுமான்

295. இந்தியாவின் அரண்மனை நகரம் எது?

விடை : கொல்கத்தா

296. டெல்லி எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

விடை : யமுனை

297. திட்டக்குழுவின் தலைவர் யார்?

விடை : பிரதமர்

298. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?

விடை : திருவனந்தபுரம்

299. அமைதிப் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

விடை : கேரளம்

300. ஸ்ரீநகர் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?

விடை : ஜீலம்

301. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?

விடை : தொட்டபட்டா (நீலகிரி)

302. Runs Ruins என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : கவாஸ்கர்

303. இந்தியாவில் வானொலி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

விடை : 1927

304. நரிமணம் எதற்கு பெயர்பெற்றது?

விடை : பெட்ரோல்

305. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி எங்குள்ளது?

விடை : ஹைதராபாத்

306. எய்ட்ஸ் நோயை உறுதிசெய்யும் பரிசோதனை எது?

விடை : வெஸ்டன் பிளாட் சோதனை

307. சூரியனுக்கு அதிக தூரத்தில் உள்ள கிரகம் எது?

விடை : புளூட்டோ

308. லாட்ஸ் கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது?

விடை : லண்டன்

309. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

விடை : சென்னை அடையாறு

310. கடல் அலைகள் உண்டாக காரணம் என்ன?

விடை : சந்திரன் சூரியன் புவியீர்ப்பு விசை

311. My Experiments with Truth என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : காந்தி

312. ஹிராகுட் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை : ஒடிஸா

313. எண்டோமாலஜி (Entomology) என்பது என்ன?

விடை : பூச்சிகளைப் பற்றிய படிப்பு

314. வடகிழக்கு பருவக்காற்றினால் அதிகம் மழை பெரும் மாநிலம் எது?

விடை : தமிழ்நாடு

315. தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு?

விடை : 1,30,058 ச.கி.மீ.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!