Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 7

226. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

விடை : முதலாம் குமாரகுப்தர்

227. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது எது?

விடை : தேசிய வளர்ச்சிக்குழு

228. சந்திரக்கடல் என்றால் என்ன?

விடை : சந்திரனில் உள்ள இருண்ட சமவெளி

229. இந்தியாவில் கிராம அமைப்பில் உள்ள குடும்ப முறை என்ன?

விடை : கூட்டுக்குடும்பம்

230. தேம்பாவணி என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை : வீரமா முனிவர்

231. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

விடை : கல்லீரல்

232. சேரர்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

விடை : பதிற்றுப்பத்து

233. அணுக்கொள்கையை முதன்முதலில் வெளியிட்டவர் யார்?

விடை : ஜான் டால்டன்

234. முதுகெலும்புத் தொடரில் உள்ள முள்ளெழும்புகளின் எண்ணிக்கை எத்தனை?

விடை : 33

235. ஆயுர்வேத மருத்துவ முறையில் இருந்து தோன்றிய மருத்துவ முறை எது?

விடை : சித்த மருத்துவம்

236. தமிழகக் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழியாக எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

விடை : 1970

237. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?

விடை : பசிபிக் பெருங்கடல்

238. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

விடை : ஆண்டிஸ் மலைத்தொடர்

239. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரம் எது?

விடை : அபு சிகரம்

240. இந்தியாவின் திட்ட நேரம் எந்த தீர்க்கரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது?

விடை : 82.5 டிகிரி கிழக்கு

241. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?

விடை : உலார் ஏரி

242. மக்களவையில் (லோக் சபா) அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை : 544

243. அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?

விடை : குடியரசு தலைவர்

244. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது?

விடை : இந்திய தேர்தல் ஆணையம்

245. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியலமைப்பு ஷரத்து எது?

விடை : 370

246. ராஜ்யசபா உறுப்பினராக குறைந்தபட்ச வயது எத்தனை?

விடை : 30

247. துணை குடியரசு தலைவரை தேர்வு செய்வது யார்?

விடை : லோக் சபா மற்றும் ராஜ்ய சபாஉறுப்பினர்கள்

248. மக்களவைக்கு குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை : 2

249. மக்கள் நல அரசு என்னும் கோட்பாடு பற்றி அரசியலமைப்பின் எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?

விடை : பகுதி - 4

250. குடியரசு தலைவர் பதவி விலகினால் தமது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிப்பார்?

விடை : துணை குடியரசு தலைவர்

251. தற்போது அடிப்படை உரிமைகள் எத்தனை தலைப்புகளில் உள்ளன?

விடை : ஆறு

252. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது குறிப்பிடப்படும் ஷரத்து எது?

விடை : ஷரத்து 16

253. தமிழ்நாட்டில் மிக நீளமான அணைக்கட்டு எது?

விடை : பவானி சாகர்

254. தமிழகத்தின் முதல் மாநகராட்சி எது?

விடை : சென்னை மாநகராட்சி (1688-ல் மாநகராட்சி ஆனது)

255. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என போற்றப்பட்டவர் யார்?

விடை : பெரியார் ஈ.வெ.ரா.

256. தமிழக அரசின் சின்னம் எப்போது உருவாக்கப்பட்டது?

விடை : 1950-ம் ஆண்டு பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டது

257. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை : திருவாரூர்

258. தமிழகத்தின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எந்த ஆண்டு யாரால் எழுதப்பட்டது?

விடை : 1879-ம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை

259. அக்கினிக் குஞ்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை : பாரதியார்

260. தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் எங்குள்ளன?

விடை : தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி

  23 Jun 2015
User Comments
06 Oct 2017 15:25:30 Bharathiraj said :
சூப்பர் இது போன்று இன்னமும் ரொம்ப நல்ல சுவாரிஸ்யங்கள் நிறைந்த பல தகவல் தாருங்கள் நன்றி வணக்கம்
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!