Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 20

781. பாராளுமன்றத்தில் இரு அவைகளும் கூட்டப்படாமல் இருக்கும்போது சட்டம் இயற்றும் அதிகாரத்தை குடியரசு தலைவருக்கு அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

விடை : பிரிவு 123

782. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனையாவது சட்டத்திருத்தத்தால் திருத்தப்பட்டது?

விடை : 42-வது சட்டத்திருத்தம்

783. இந்தியாவில் நிதி நெருக்கடி எத்தனை தடவை நடைமுறைப்படுத்தப்பட்டது?

விடை : ஒருதடவை கூட இல்லை

784. கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதற்கு மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை எந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

விடை : 97-வது சட்டத்திருத்தம் (2012)

785. தற்போதுள்ள லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த ஆண்டு வரை மாற்றப்படாமல் இருக்கும்?

விடை : 2026-ம் ஆண்டு வரை

786. பாராளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டவடிவம் பெறுவதற்கு எத்தனை நிலைகளை கடந்துவர வேண்டும்?

விடை : 5 நிலைகள்

787. மரண தண்டனையை நீக்கி மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை : குடியரசுத் தலைவர்

788. இந்திய துணை பிரதமராக பதவி வகித்த காலத்தில் இறந்தவர் யார்?

விடை : சர்தார் வல்லபாய் படேல்

789. குடியரசுத் தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவியில் யாரும் இல்லாதபோது, யார் அப்பணியை மேற்கொள்ள முடியும்?

விடை : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

790. தூக்குத்தண்டனையை ரத்துசெய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?

விடை : இல்லை

791. மகாராஷ்டிரம், குஜராத் எந்த மாநி லத்தில் இருந்து எப்போது பிரிக்கப் பட்டு தனி மாநிலம் ஆனது?

விடை : மும்பை மறுசீரமைப்பு சட்டம் 1960-ன்படி 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது

792. இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி என அழைக்கப்படுபவர் யார் ?

விடை : பி.ஆர்.அம்பேத்கர்

793. உள்ளாட்சி அரசாங்க அமைப்பில் கடைசி நிலை என எதை அழைக்கிறோம்?

விடை : கிராம பஞ்சாயத்து

794. ராஜ்ய சபாவின் தலைவர் யார்?

விடை : குடியரசுத் துணைத்தலைவர்

795. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது பாராளுமன்றம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?

விடை : ஏப்ரல் 1957

796. மத்திய அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கும் மிகாமல் பிரதமர் நியமித்துக்கொள்ளலாம் என எத்தனையாவது சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

விடை : 91-வது சட்டத்திருத்தம்

797. இந்திய அரசியலமைப்பின் முகவுரை முதன்முதலில் எப்போது திருத்தம் செய்யப்பட்டது?

விடை : 1976-ம் ஆண்டு

798. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் தகராறை தீர்த்துவைக்கும் அமைப்பு எது?

விடை : உச்சநீதிமன்றம்

799. மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை எப்போது கொண்டுவரப்பட்டது?

விடை : 1959-ல்

800. நெருக்கடி காலத்தில் ஒரு மாநில சட்டப்பேரவையின் காலத்தை நீட்டிப்பு செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?

விடை : பாராளுமன்றம்

801. இந்திய பாராளுமன்ற வரலாற்றில் எந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் "குற்றஞ்சாட்டப்படல்" (Impeachment Proceeding) நடவடிக்கை எடுக்கப்பட்டது?

விடை : நீதிபதி வி.ராமசாமி

802. உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

விடை : உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்

803. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?

விடை : ஆர்.கே. சண்முகம் செட்டியார்

804. இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

விடை : 1957

805. மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இந்திய குடியரசு தலைவருக்கு எந்த விதியில் வழங்கப்பட்டுள்ளது?

விடை : விதி எண் 72

806. நிலச்சீர்திருத்தங்கள் குறித்து கூறும் சட்டத்திருத்தம் எது?

விடை : 76-வது சட்டத்திருத்தம்

807. எந்த மாநிலம் 10-வது மக்களவையில் பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்தது?

விடை : ஜம்மு-காஷ்மீர்

808. இந்திய அரசியலமைப்பின் ஆன்மா (Soul) என அழைக்கப்படுவது எது?

விடை : முகப்புரை

809. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?

விடை : ஜனவரி 2, 1957

810. லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவு யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

விடை : தலா ஒரு உறுப்பினர்

811. இந்தியாவில் பிரிந்த முதல் மொழிவாரி மாநிலம் எது?

விடை : ஆந்திரா

812. தமிழ்நாட்டில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன?

விடை : 39

813. தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வுசெய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை?

விடை : 18

814. மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

விடை : 356 சட்டப்பிரிவு

815. தற்போதைய மக்களவை (16-வது மக்களவை) சபாநாயகர் யார்?

விடை : சுமித்ரா மகாஜன்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!