Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 19

711. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகு சட்டமாகிறது?
விடை : குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததும்

712. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனை வயது இருக்க வேண்டும்?
விடை : 35

713. பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடு எதன்மூலம் தீர்க்கப்படும்?
விடை : லோக்சபா சபாநாயகரின் நடவடிக்கை மூலம்

714. உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்?
விடை : குடியரசுத்தலைவருக்கு

715. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன?
விடை : 65

716. மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எத்தனை மாதங்களில் உறுப்பினராக வேண்டும்?
விடை : 6 மாதங்கள்

717. வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
விடை : 61-வது சட்டத்திருத்தம்

718. ஓர் அரசியல் கட்சி, தேசிய கட்சியாக எப்போது அங்கீகரிக்கப்படும்?
விடை : 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால்

719. அரசு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) எதிரொலிக்கும் சமதர்ம கொள்கையின் நோக்கம் எதைக் காட்டுகிறது?
விடை : நாட்டின் பொருளாதார வளம் ஒரு சாராரிடம் மட்டுமே குவிவதை தடுத்து சமமான பகிர்வை உறுதி செய்வது

720. இந்திய அரசியலமைப்பின்படி ராஜ்ய சபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படும்?
விடை : ராஜ்ய சபாவை கலைக்க இயலாது

721. 92-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
விடை : போடோ, டோக்ரி, மைதிலி, சாந்தலி ஆகிய 4 மொழிகள் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட விவரத்தை சட்டமாக்கியுள்ளது.

722. எந்த சட்டங்களுக்கு எதிராக நீதிப்பேராணை (Writ) வரம்பு வழங்கப்படுவதில்லை?
விடை : MISA, NSA

723. இந்திய அரசியலமைப்பு பற்றிய இடைவிளக்கங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் எந்த தலைப்பின்கீழ் இடம்பெறுகின்றன?
விடை : மேல்முறையீட்டு நீதி வரம்பு (Appellate Jurisdiction)

724. மத்திய அரசு ஊழியர் ஒருவர் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து எங்கு முறையிடலாம்?
விடை : உச்சநீதிமன்றம்

725. இந்திய சுதந்திரச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
விடை : ஜூன் 1947

726. எந்த சட்டத்தின்படி இந்திய பிரிவினை செய்யப்பட்டது?
விடை : இந்திய சுதந்திரச் சட்டம் 1947

727. இந்திய அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை?
விடை : 299

728. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
விடை : நவம்பர் 26, 1949

729. தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக டெல்லி எந்த சட்டத்திருத்தம் மூலம் அறிவிக்கப்பட்டது?
விடை : 69-வது சட்டத்திருத்தம்

730. இந்திய மாநிலங்கள் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
விடை : மக்கள் பேசும் மொழி அடிப்படையில்

731. இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு எந்த வகையான குடியுரிமையை வழங்கியுள்ளது?
விடை : ஒற்றைக்குடியுரிமை

732. குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
விடை : 1955-ம் ஆண்டு சட்டம்

733. அரசியலமைப்பின் 12-வது விதி முதல் 35-வது விதி வரை குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எத்தனை?
விடை : 6

734. நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை என்ன?
விடை : அடிப்படை உரிமைகள்

735. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை?
விடை : 11

736. ஜார்கண்ட், சதீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
விடை : 84-வது சட்டத்திருத்தம்

737. இந்திய அரசியலமைப்பில் எந்த விதியில் மைய நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன?
விடை : விதி 52-151


738. மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் எது?
விடை : 77-வது சட்டத்திருத்தம்

739. லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை : 545

740. 6 முதல் 14 வயது வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் எது?
விடை : 86-வது சட்டத்திருத்தம்

741. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை : 250

742. குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபாவுக்கு எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?
விடை : 12

743. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
விடை : 6 ஆண்டுகள்

744. ராஜ்ய சபா உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வுபெறுகிறார்கள்?
விடை : 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை

745. பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும்?
விடை : லோக் சபா
746. இந்திய அரசியலமைப்பின்படி மைய பட்டியலில் (Central List) உள்ள துறைகள் எத்தனை?
விடை : 97

747. மாநிலப் பட்டியலில் (State List) எத்தனை துறைகள் உள்ளன?
விடை : 66

748. பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ள துறைகள் எத்தனை?
விடை : 47

749. இந்திய தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்து எந்த பதவிக்கு இணையானது?
விடை : உச்சநீதிமன்ற நீதிபதி

750. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பங்கீடு குறித்து பரிந்துரை செய்ய எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு நியமிக்கப்படுகிறது?
விடை : 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை

751. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளும், நீதித்துறையின் நீதிப்புணராய்வு அதிகாரமும் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை : கனடா

752. சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கிய சட்டத்திருத்தம் எது?
விடை : 1978-ம் ஆண்டின் 44-ஆம் சட்டத்திருத்தம்

753. மாநில ஆளுநர்களை நியமிப்பவர் யார்?
விடை : குடியரசுத்தலைவர்

754. இந்திய அரசியலமைப்பின் எந்தப்பிரிவு தேர்தல் ஆணையம் அமைக்க வகைசெய்கிறது?
சட்டப்பிரிவு 324

755. மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் சட்டப்படி யாரிடம் இருக்கிறது?
விடை : குடியரசுத்தலைவர்

756. குடியரசுத்தலைவர் ஓராண்டில் குறைந்தபட்சம் எத்தனை முறை பாராளுமன்றத்தை கூட்டுகிறார்?
விடை : இரண்டுமுறை

757. லோக்சபா எனப்படும் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
விடை : குடியரசுத்தலைவர்

758. குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும்போது குடியரசு துணைத்தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத்தலைவர் பொறுப்பு வகிக்கலாம்?
விடை : 6 மாதங்கள்

759. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் அமைச்சராக நியமிக்கப்படும் ஒருவர், எவ்வளவு காலத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
விடை : 6 மாதங்கள்

760. எந்த ஒரு அமைச்சரையும் பதவி விலகக்கோரும் அதிகாரம் படைத்தவர் யார்?
விடை : பிரதமர்

761. மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம்பெற்ற அமைப்பு எது?
விடை : பாராளுமன்றம்

762. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக செயல்படுவது எது?
விடை : உச்ச நீதிமன்றம்

763. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) எப்போது கொண்டுவரப்பட்டது?
விடை : 2005

764. மாநில ஆளுநரை எந்தவித காரணமும் குறிப்பிடாமல் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார்?
விடை : குடியரசுத்தலைவர்

765. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார்?
விடை : ஆளுநர்

766. டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பவர் யார்?
விடை : ஆளுநர்

767. ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பின்னரும் அடுத்த புதிய சட்டப்பேரவை முதல் தடவையாக அமரும் வரை பதவியில் நீடிப்பவர் யார்?
விடை : சட்டப்பேரவை சபாநாயகர்

768. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்ன?
விடை : 62

769. இந்திய தலைமை தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
விடை : 6 ஆண்டுகள்

770. உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எந்த தேர்தல் ஆணையம்?
விடை : மாநில தேர்தல் ஆணையம்

771. நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
விடை : 74-வது சட்டத்திருத்தம்

772. மாநகர தந்தை, மாநகரின் முதல் குடிமகன் என அழைக்கப்படுவர் யார்?
விடை : மேயர்

773. கிராம சபை ஆண்டுக்கு எத்தனைமுறை கூட வேண்டும்?
விடை : 4 முறை

774. குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
விடை : 1984

775. உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ரிப்பன் பிரபு

776. கிராம ஊராட்சித் தலைவர் எந்த முறையில் தேர்வுசெய்யப்படுகிறார்?
விடை : மக்களால் நேரடியாக

777. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆனது?
11 மாதங்கள், 17 நாட்கள்

778. மன்னர் மானிய ஒழிப்புக்கு வகை செய்த சட்டத்திருத்தம் எது?
விடை : 26-வது சட்டத்திருத்தம்

779. லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
விடை : 31-வது சட்டத்திருத்தம்

780. குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அதிகாரம் எந்தப்பிரிவில் உள்ளது?

விடை : சட்டப்பிரிவு 143

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!