Home  |  அறுசுவை

வெள்ளை பூண்டு ஊறுகாய் !!

வெள்ளை பூண்டு ஊறுகாய் !!


வெள்ளை பூண்டு ஊறுகாய் செய்வது ஈசியான ஒன்று , இந்த வகை பூண்டு சாப்பாடு சாப்பிடும் போது சேர்த்துக் கொண்டால் நிரைய சாப்பாடு சாப்பிட இது தூண்டும்.

முதலில் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்து கொள்ளவும்.


வெள்ளை பூண்டு - 300 கிராம்,
மிளகாய்த்தூள் - 3/4 கப்,

எண்ணெய் - 1 கப்
பெருங்காயம் - சிறிது,

சிறு கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை.

உப்பு - தேவையான அளவு.
எலுமிச்சை ரசம் - 1 கப்

வறுத்து பொடிக்க தேவையான பொருட்கள் -
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
தனியா - 1/2 ஸ்பூன்,


எல்லா பொருட்களையும் தயார் செய்து கொண்டு சுத்தமான வடை சட்டியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம் பொறு பொருவென பொடித்து வைத்துக்கொள்ளவும்.


வெள்ளை பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து எடுத்து வைக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட போதும். தனியே ஒரு பாத்திரத்தில் எலுமிச்சையை பிழிந்து வைத்துகொள்ளவும்.


மேலும் வடை சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்து பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். உடன் பூண்டு சேர்த்து நன்கு கலக்கவும்,


பிறகு மிளகாய்த்தூள், உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கி அடுப்பை அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு அதில் எலுமிச்சை ரசத்தை ஊற்றி நன்கு கிளறவும்.


இது முதலில் மிக கெட்டியா இருக்கும் சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து தனியே வந்து விடும். சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த வகை ஊறுகாய் மூன்று மாதம் வரை கெடாது.


நல்லா சாப்பிடுங்க நல்லதையே சாப்பிடுங்க!!

  27 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!