Home  |  திரை உலகம்

அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், அருண் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 


இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் 6 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் அஜீத்தின் அறிமுகப் பாடலான ‘அதாறு அதாறு, உதாறு உதாறு...’ எனத் தொடங்கும் பாடலை கானா பாலா பாடியுள்ளார்.


இதுவரை பல நடிகர்களுக்கு பாட்டு பாடியுள்ள கானா பாலா, அஜீத் படத்திற்கு பாட்டு பாடியதில்லை. ஒவ்வொரு பாடகருக்கும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் பாட்டு பாடுவது கனவாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. 


அந்த வகையில் கானா பாலாவிற்கு என்னை அறிந்தால் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. 


இந்தப் பாடலை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் எழுதியுள்ளார். கானா பாலாவுடன் இணைந்து இப்பாடலை விஜய் பிரகாசும் இந்த பாடலை பாடியுள்ளார். 


கானா பால இந்த வருடத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். இவரின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


அந்த வகையில் தல படத்தின் அறிமுக பாடலும் நல்ல வரவேற்பு பெறும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்